'பாரம்பரிய மாட்டு இனங்களை காப்பது நமது கடமை', கோவை கல்லூரி நிகழ்ச்சியில் கார்த்திகேய சிவசேனாபதி பேச்சு .


கோவை, தடாகம் சாலையில் உள்ள கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில், கோவை ரோட்ராக்ட் கிளப்  சார்பில் "தமிழ்நாட்டின் கால்நடை மற்றும் உயிரி பன்முகத்தன்மை கலாச்சார விளையாட்டு" என்னும் தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இந்திய பல்லுயிர் பாதுகாப்பு குழுமத்தில் நிர்வாக அறங்காவலர் கார்த்திகேய சிவசேனாபதி கலந்து கொண்டு மாணவர்களுடன் உரையாற்றினார்.



இந்நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், 'இந்தியாவில் முன்பு இருந்த மாட்டு இனங்கள் இன்று அழிந்து வரும் சூழ்நிலை நிலவி வருகிறது. வட மாநிலங்கள் மற்றும் தென் மாநிலங்களிலும் இன்ற பரவலாக இருக்ககூடிய மாட்டு இனம் 'ஜெர்சி'. ஜெர்சி இன மாடுகள் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் வரவழைக்கப்பட்டு இனபெருக்கத்தின் மூலம் இன்று அதிகம் இந்தியாவில் பரவியுள்ளது. இவை அதிகம் பால் கொடுக்கும் தன்மை கொண்டவை. மேலும், 1945ம் ஆண்டு இரண்டாம் உலக போர் முடிந்த நிலையில் தற்பொழுது ரசாயனம் மூலமாகவும், பீட்டா போன்ற பன்னாட்டு அமைப்புகள் மூலமாகவும் அந்நிய பொருட்கள் இந்தியாவில் பெரும் இடத்தை பிடித்துள்ளது, இதுவே நமது கலாச்சாரம் மற்றும் பண்பாட்டின் அழிவிற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

கடந்த மாதம் ஜல்லிக்கட்டிற்காக தமிழ்நாட்டில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்றிணைந்து நடத்திய மாபெரும் புரட்சி மூலமாக இன்று ஜல்லிக்கட்டு விளையாட்டு தமிழ்நாட்டில் மீண்டும் களம் கண்டுள்ளது. இறுதி கட்ட போராட்டத்தில் நுழைந்த சில சமூக விரோதிகளால் தான் போராட்டம் திசை மாறியது. ஜல்லிக்கட்டு விளையாட்டு நிரந்திரமாக தமிழகத்தில் நடை பெற முக்கிய காரணம் மாணவர்கள் தான். இந்தியாவில் மற்றும் தமிழநாட்டில் உள்ள நாட்டு மாட்டு இனங்களை பாதுகாப்பதும் நமது முக்கிய கடமை. அவ்வாறு பாதுகாத்தால் தான், நமக்கு பின்னால் வரும் சந்ததியினருக்கு நம் பாரம்பரிய கால்நடைகளை கொண்டு சேர்க்க முடியும்', என்றார்.   



Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...