நீலகிரியில் தேசிய மாணவர் படை மாணவிகளுக்கு மலையேற்ற பயிற்சி தொடக்கம் - 3 கட்டங்களா நடைபெற்ற பயிற்சி

நீலகிரியில் கடந்த 30ஆம் தேதி தேசிய படை மாணவிகளுக்கான மலையேற்ற பயிற்சி தொடங்கிய நிலையில், 3 கட்ட மலையேற்ற பயிற்சிக்கு பின் பழங்குடி அருங்காட்சியகத்தை பார்வையிட்டனர்.


நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் தேசிய மாணவர் படை மாணவிகளுக்கு மலையேற்ற பயிற்சி கடந்த மாதம் 30 ஆம் தேதி தொடங்கியது.



பயிற்சியின் முதல் கட்டமாக4 கிலோமீட்டர் தொலைவிலான அவா மலை முதல் சிம்ஸ்பூங்கா வரையில் மலையேற்ற பயிற்சி வழங்கப்பட்டது.

இரண்டாம் நிலை பயிற்சியாக 8 கிலோமீட்டர் தொலைவு என்ற அடிப்படையில் சேலாஸில் இருந்து பக்காசுரன் மலை, உபதலையிலிருந்து கேந்தரை கிராமம் வழியாக பழத்தோட்டம் வந்தடையும் வகையிலான பயிற்சி வழங்கப்பட்டது.



இதனை தொடர்ந்து மூன்றாம் கட்டமாக முத்தொரை பாலாடாவிலிருந்து முத்துனாடு மந்து வரையிலான மலையேற்ற பயிற்சி வழங்கப்பட்டது.

இந்நிலையில், இறுதியாக தேசிய படை மாணவிகள் பழங்குடி கிராமம் மற்றும் பழங்குடி அருங்காட்சியகத்தை பார்வையிட்டனர். மேலும் பழங்குடி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து, கல்வி, வாழ்வியல் மதிப்பீடுகள் குறித்துவிழிப்புணர்வு வழங்கப்பட்டது.



இந்த பயிற்சியின் மூலம் பன்முக கலாச்சாரம் குறித்து அறிந்து கொள்ள வாய்ப்பாக அமைந்ததாக பயிற்சியில் கலந்து கொண்ட மாணவிகள் தெரிவித்தனர்.



Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...