வார்டு எண் 43: கோவை வேலாண்டிபாளையம் அருகே சிதிலமடைந்துள்ள அங்கன்வாடி மையம் - புதிதாக கட்டித்தரக்கோரி கவுன்சிலர் மல்லிகா ஆட்சியரிடம் மனு

கோவை வேலாண்டிபாளையம் அருகே 1972ஆம் ஆண்டு கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடம் சிதிலமடைந்துள்ள நிலையில் கட்டிடங்களை புதிதாக கட்டித்தர வலியுறுத்தி, 43வது வார்டு உறுப்பினர் மல்லிகா புருஷோத்தமன் மாவட்ட ஆட்சியர் சமீரனிடம் மனு அளித்தார்.


கோவை: கோவை மாநகராட்சியின் 43 வது வார்டு மாமன்ற உறுப்பினராக இருந்து வருபவர் மல்லிகா புருஷோத்தமன். இவர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.

அவர் அளித்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது, கோவை மாநகராட்சி 43 வது வார்டு தெலுங்கு பாளையம் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட வேலாண்டிபாளையம் ஜவஹர்புரம் பகுதியில் டாக்டர் ராதாகிருஷ்ணன் வீதியில் அங்கன்வாடி மைய கட்டிடம் உள்ளது.

கடந்த 1972ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த அங்கன்வாடி மையத்தின் கட்டிடம் தற்போது மேற்கூரை ஓடுகள் உடைந்து, கட்டிடம் சிதலமடைந்து உள்ளது. எனவே அதனை புதிதாக கட்டித் தர வேண்டும்.

மேலும், வெங்கடாபுரம் வெங்கடசாமி வீதியில் அமைந்துள்ள புரட்சித்தலைவர் சத்துணவு கூடத்தையும் புதிதாக கட்டித் தர வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செப். 24-ல் நேரடி மாணவர் சேர்க்கை

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தனியார் இணைப்புக் கல்லூரிகளில் காலியாக உள்ள இளமறிவியல் இடங்களை நிரப்ப நேரடி மாணவர...

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம்

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், ப...

தேசிய அளவிலான சிறிய ரக ரேஸ் கார் பந்தயத்தில் கோவை ஈ.ஏ.எஸ்.ஏ., கல்லூரி மாணவர்கள் அணி இரண்டாமிடம்

கோவை நவக்கரையில் உள்ள ஈ.ஏ.எஸ்.ஏ., என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மெக்கானிக்கல் என்ஜினீயரிங் இரண்டாமாண்டு மாண...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் செப்டம்பர் 21ஆம் தேதி நிலவரப்படி 45.77 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி க...

கோவையில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் செப்டம்பர் 21 நிலவரப்படி ஆனைமலையை அடுத்த ஆழியாறு அணையில் நீர்மட்டம் 63.3 அடியாகவும், பொள்ளாச்சியை அடுத...

கோவை பீளமேடு கவுன்சிலர் பள்ளி உணவின் தரம் மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 21, 2026 அன்று வார்டு கவுன்சிலர் அம்பிகா தனப...