தேசிய ஒற்றுமை தினம்: கோவையில் மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையில் உறுதிமொழி எடுத்துக் கொண்ட அரசு அலுவலர்கள்

சர்தார் வல்லபாய் படேலின் 147-வது பிறந்த தினமான இன்று, தேசிய ஒற்றுமை தினத்தையொட்டி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு முகாமில் ஆட்சியர் சமீரன் தலைமையில் அரசு அலுவலர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.


கோவை: இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படுபவர் சர்தார் வல்லபாய் படேல். சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராக பதவி வகித்த வல்லபாய் படேல் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 550-க்கும் மேற்பட்ட குறுநில அரசுகளை இந்தியாவுடன் இணைத்தவர் வல்லபாய் படேல் என்றால் அது மிகையல்ல.

கடைசிவரை இணைய மறுத்த ஐதராபாத் நிஜாம், ஜூனாகத்(குஜராத்) நவாப் ஆகியோரை தனது வல்லமையால் இந்தியாவுடன் இணைய வைத்தவர் வல்லபாய் படேல். அவரது பிறந்த நாள் ஆண்டுதோறும், தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், சர்தார் வல்லப்பாய் படெலின் 147-வது பிறந்த தினமான இன்று, தேசிய ஒற்றுமை தினத்தையொட்டி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு முகாமில் ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.



இதில் மாவட்ட ஆட்சியர் உறுதி மொழியினை வாசிக்க தொடர்ந்து, அனைத்து துறை அரசு அலுவலர்களும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில் கோவை மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கோகிலா உட்பட அனைத்து துறை அரசு அலுவலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செப். 24-ல் நேரடி மாணவர் சேர்க்கை

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தனியார் இணைப்புக் கல்லூரிகளில் காலியாக உள்ள இளமறிவியல் இடங்களை நிரப்ப நேரடி மாணவர...

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம்

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், ப...

தேசிய அளவிலான சிறிய ரக ரேஸ் கார் பந்தயத்தில் கோவை ஈ.ஏ.எஸ்.ஏ., கல்லூரி மாணவர்கள் அணி இரண்டாமிடம்

கோவை நவக்கரையில் உள்ள ஈ.ஏ.எஸ்.ஏ., என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மெக்கானிக்கல் என்ஜினீயரிங் இரண்டாமாண்டு மாண...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் செப்டம்பர் 21ஆம் தேதி நிலவரப்படி 45.77 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி க...

கோவையில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் செப்டம்பர் 21 நிலவரப்படி ஆனைமலையை அடுத்த ஆழியாறு அணையில் நீர்மட்டம் 63.3 அடியாகவும், பொள்ளாச்சியை அடுத...

கோவை பீளமேடு கவுன்சிலர் பள்ளி உணவின் தரம் மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 21, 2026 அன்று வார்டு கவுன்சிலர் அம்பிகா தனப...