தீபாவளிக்காக கோவையில் இருந்து 20 டன் உணவு வகைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி - விமான நிலைய அதிகாரிகள் தகவல்

தீபாவளி பண்டிகையயொட்டி கடந்த அக்டோபர் 1முதல் 23 ஆம் தேதி வரை கோவையில் இருந்து ஷார்ஜா மற்றும் சிங்கப்பூருக்கு 20 டன் எடையிலான இனிப்பு, காரம் உள்ளிட்ட பல உணவு வகைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்.


கோவை: கோவை விமான நிலையத்தில் இருந்து ஷார்ஜாவுக்கு வாரத்தில் ஐந்து நாட்களும் சிங்கப்பூருக்கு வாரத்தில் அனைத்து நாட்களும் விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது.

ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்கு இனிப்பு, காரம் உள்ளிட்ட பல உணவு வகைகளுக்கு வெளிநாட்டில் வாழும் இந்தியர்களிடையே அதிக வரவேற்பு இருப்பது வழக்கம். இதனால் அதிக எடையிலான உணவு வகைகள் ஏற்றுமதி செய்யப்படும்.

இந்த ஆண்டு 23 நாட்களில் 20 டன் எடையிலான உணவு வகைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது,

அக்டோபர் மாதம் தொடங்கியது முதலே கோவை விமான நிலையத்தில் உள்ள சரக்கக அலுவலகத்தில் இனிப்பு, காரம் உள்ளிட்ட பல உணவு வகைகள் அதிகளவு சிங்கப்பூர் மற்றும் ஷார்ஜாவுக்கு ஏற்றமதி செய்ய புக்கிங் செய்யப்பட்டன.

முதல் இரண்டு வாரங்களில் வாரம்தோறும் 4.5 டன் எடையிலான இனிப்பு உள்ளிட்ட பல உணவு வகைகள் புக்கிங் செய்யப்பட்டன. மூன்றாவது வாரம் அதாவது அக்டோபர் 17-ல் தொடங்கி, அக்டோபர் 23-ம் தேதி வரை மட்டும் 10 டன் எடையிலான உணவு வகைகள் ஏற்றுமதி செய்யப்பட்டன.

ஷார்ஜா விமானத்தில் மொத்தம் 3 டன், சிங்கப்பூர் விமானத்தில் 7 டன் கொண்டு செல்லப்பட்டன. அக்டோபர் 1-ல் தொடங்கி 23-ம் தேதி வரை இரு நாடுகளுக்கும் மொத்தம் 20 டன் எடையிலான உணவு வகைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

இந்தாண்டு பல வகை உணவுகள் ஏற்றுமதி செய்யப்பட்டாலும் விளக்கு உள்ளிட்ட தீபாவளியை முன்னிட்டு தயாரிக்கப்பட்ட பல சிறப்பு வடிவங்களிலான இனிப்பு வகைகள் அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்டன.

எதிர்வரும் நாட்களில் இனிப்பு, கார வகைகளுக்கான புக்கிங் குறைந்து இதர உணவு வகைகள் குறைந்த அளவில் வழக்கம் போல் புக்கிங் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...