கோவை பந்த் அன்று திறக்கப்படும் கடைகளுக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் - வணிகர் சங்க பேரமைப்பு கோரிக்கை மனு

கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள பந்த் அன்று சிறு, குறு மற்றும் வணிக நிறுவனங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.



கோவை: கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கடந்த 23ஆம் தேதி கார் வெடி விபத்து சம்பவம் நடைபெற்றது.

இதன் எதிரொலியாக காவல் துறையினர் ஆறு பேரை கைது செய்துள்ளனர். இந்த நிலையில் கோவை மாநகரில் கார் சிலிண்டர் வெடி விபத்து சம்பவத்தின் எதிரொலியாக வரும் 31ம் தேதி கடை அடைப்பு என பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து இன்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் கடையடைப்பு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கடையடைப்பில் கலந்து கொள்ளாமல் கடைகளை திறந்து வைத்திருக்கும் கடைகளுக்கு அச்சுறுத்தல்கள் ஏற்படாத வண்ணம் காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.



இதைத்தொடர்ந்து கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கோரிக்கை மனு அளித்தது.

கோரிக்கை மனுவில்:-

கடையடைப்பு வணிகர்களையும் பொதுமக்களையும் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் எனவே பொது பந்த் தேவைப்படும் போது முழு ஒத்துழைப்பு வழங்கப்படும்.

தற்போது அறிவித்துள்ள பந்த்தை பரிசீலனை செய்ய வேண்டும்.

மேலும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பந்தில் வணிகர் சங்கங்கள் கலந்து கொள்வதில்லை அதே நேரத்தில் அச்சுறுத்தல்கள் ஏற்படாத வண்ணம் காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை மனு அளித்தனர்.

Newsletter

நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் சாலை வசதி கோரி பொதுமக்கள் முற்றுகை

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகவான் கார்டன் பகுதியில் கடந்த ஆறு ஆண்டுகளாக சாலை வசதி ஏற்படுத்தாததை கண...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 165 தொழில் முனைவோர்களுக்கு ரூ.83.20 லட்சம் மானியம் வழங்கல்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் Dr.K.சுப்பிரமணியன் மத்திய அரசின் RKVY-RAFTAAR-R-ABI திட்டத்தின் கீழ்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சங்க கால கடம்ப மரத்திலிருந்து மருத்துவ குணமுள்ள கடம்பின் பிரித்தெடுக்கும் முறைக்கு காப்புரிமை

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்ட கடம்ப மரத்திலிருந்து க...

திருப்பூர்: அமராவதி அணை 45.8 அடியாக உயர்வு; திருமூர்த்தி 32.95 அடி பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை ஜூலை 9ஆம் தேதி இன்று 45.8 அடி நீர்மட்டத்தை எட்டியுள்ளது. வினாடிக்கு 297 கன அடி நீர்வ...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: தென்மேற்கு பருவமழை காரணமாக நீர் வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அத...

தேசிய இணைய பரிமாற்ற மையத்தில் இணைய நிர்வாக பயிற்சிக்கு SRIT மாணவி தேர்வு

கோயம்புத்தூர் Sri Ramakrishna Institute of Technology மாணவி ஷாலினி ஏ., புது தில்லி தேசிய இணைய பரிமாற்ற மையம் (NIXI) வழங்...