கேரளாவில் பரவும் பறவை காய்ச்சல் எதிரொலி: கோவை - கேரளா எல்லையில் கண்காணிப்பு பணிகள் தீவிரம்

கேரளாவில் பறவை காய்ச்சல் பரவல் காரணமாக 1500 வாத்துகள் உயிரிழந்த நிலையில் அதன் எதிரொலியாக கோவை - கேரள எல்லை பகுதியில் உள்ள 6 சோதனைச் சாவடிகளிலும் கால்நடை மருத்துவர்கள் தலைமையில் கண்காணிப்பு பணிகள் தீவிரம்.



கோவை: கேரளா மாநிலம் ஆலப்புழாவில் 1500 வாத்துகள் திடீரென உயிரிழந்தன. இந்நிலையில், வாத்துகளை சோதனைக்கு உட்படுத்தியதில், வாத்துகளுக்கு பறவை காய்ச்சல் இருந்தது உறுதி செய்யப்பட்டது.

இதனிடையே பறவை காய்ச்சல் காரணமாக பாதிப்புக்கு உள்ளான 25,000 கோழிகளை உடனடியாக அழிக்க அம்மாநில அரசு அறிவுறுத்தி உள்ளது.

இந்நிலையில், பறவை காய்ச்சல் பரவல் காரணமாக அருகே உள்ள கோவை மாவட்ட எல்லைகளில் வாளையாறு, வேலந்தாளம், முள்ளி, ஆனைக்கட்டி, பட்டிசாலை, தோலம்பாளையம், சோதனைச் சாவடிகளில் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



கால்நடை மருத்துவர்கள் தலைமையில் இந்த கண்காணிப்பு பணிகள் நடந்து வருகின்றன. குறிப்பாக கேரளாவிற்கு கோழி, முட்டை, தீவனங்கள் ஏற்றிச்சென்று திரும்ப வரும் வாகன எண்கள், செல்லும் முகவரி பதிவு செய்யப்பட்டு வருகின்றன.



இதனிடையே கேரளாவில் இருந்து கோவை நோக்கி வரும் வாகனங்கள் கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...