திருப்பூரில் 13 வயது சிறுமியை வன்கொடுமை செய்த 62வயது முதியவருக்கு 47 ஆண்டுகள் சிறை - திருப்பூர் நீதிமன்றம் அதிரடி

காங்கேயம் அருகே 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 62 வயது முதியவருக்கு 47 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருப்பூர் மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை சேர்ந்தவர் பழனி (62). கூலித் தொழிலாளியான இவர், கடந்த 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பாக திருப்பூர் மகளிர் போலீசார் போக்சோ பிரிவின் கீழ் பழனியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை திருப்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி நாகராஜன், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பழனிக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் மொத்தம் 47 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் ஜமீலா பானு ஆஜராகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...