கோவை கிணத்துக்கடவு தினசரி சந்தையில் தக்காளி விலை கடும் சரிவு - கிலோ ரூ.16க்கு ஏலம் போனதால் விவசாயிகள் ஏமாற்றம்

கடந்த வாரம் பெய்த கனமழை காரணமாக கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.10 முதல் ரூ.16 வரை மட்டுமே வியாபாரிகளால் ஏலம் எடுக்கப்பட்டதால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.


கோவை: கிணத்துக்கடவு புதிய பேருந்து நிலையம் பகுதியில் தினசரி காய்கறி சந்தை செயல்பட்டு வருகிறது. கிணத்துக்கடவு சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் தக்காளிகளை விவசாயிகள், இந்த தினசரி காய்கறி சந்தைக்கு கொண்டு வந்து ஏலம் மூலம் விற்பனை செய்து வருவது வழக்கம்.

இந்த நிலையில் கடந்த வாரம் வரை ஒரு கிலோ நாட்டுத்தக்காளி 30 முதல் 35 ரூபாய் வரை ஏலம் போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை முதல் தக்காளியின் விலை மளமளவென சரிந்தது.

இதனிடையே தினசரி காய்கறி சந்தையில் ஒரு கிலோ நாட்டு தக்காளி பத்து ரூபாய் முதல் 16 ரூபாய் வரை மட்டுமே வியாபாரிகள் ஏலம் எடுத்ததால் விவசாயிகள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

தீபாவளிக்கு முன்பு பெய்த மழையால் கிணத்துக்கடவு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டதே இந்த விலை சரிவுக்கு காரணம் என விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...