கோவை ஜமாத் அமைப்பினருடன் மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆலோசனை கூட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜாமத் கூட்டமைப்பினருடன் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கோவை மாவட்ட ஜமாத் அமைப்பினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரை சந்தித்தனர்.



கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஜாமத் கூட்டமைப்பினருடான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கோவையில் நிலவி வரும் அசம்பாவித சூழல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர், இந்த கூட்டத்தில், கோவை மாநகரில் ஏதேனும் தகவல் இருந்தால் மாவட்ட நிர்வாகத்திற்கும் காவல் துறைக்கும் தெரிவிக்க வேண்டும் என்ற வேண்டுகோள் விடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் அனைத்து ஜமாத் அமைப்பினரும் இந்த சம்பவத்தை கண்டிப்பதாக தெரிவித்துள்ளனர் என கூறினார். ஒவ்வொரு இடத்திலும் காவல்துறையினர் அனைத்து மதத்தினரிடமும் கூட்டம் போடப்பட்டு வருவதாகவும் தற்போது அதனை இன்னும் வலுபடுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

பின்னர் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பேசிய மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், கோவை மாநகரில் பாதுகாப்பு பலபடுத்தப்பட்டுள்ளதாக கூறினார். மேலும் முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில் ரோந்து பணிகள், செக்போஸ்டுகள் அனைத்தும் 24 மணி நேரம் செயல்படுத்த உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் அச்சம்பவம் நடந்த சில மணி நேரத்திற்குள்ளாகவே குற்றவாளிகளை காவல்துறை கைது செய்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் ஆர்ப்பாட்டம் ,போராட்டம் போன்றவைகளுக்கான அனுமதி சூழலுக்கு ஏற்ப முடிவு செய்யப்படும் என தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் ஆகியோர் பங்கேற்றனர்.

Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...