கோவை சுந்தராபுரம் அருகே குடிபோதையில் பைக்கில் சென்ற நபர் தவறி விழுந்து பலியான சோகம்

சுந்தராபுரம் அருகே குடிபோதையில் பைக்கில் சென்ற சிவசாமி என்பவர் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


கோவை: கோவை மாவட்டம் சுந்தராபுரம் அடுத்த மாச்சம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி மகன் சிவசாமி (36). திருமணமான இவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார்.

ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பணிகளை செய்து வந்த சிவசாமி நேற்றிரவு குடிபோதையில் தனது இருசக்கர வாகனத்தில் சுந்தராபுரம் நோக்கி சென்றுள்ளார்.

அப்போது மாச்சம்பாளையம் மாரியம்மன் கோவில் அருகே வந்தபோது திடீரென இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சரிந்து விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தலையின் பின்புறம் மற்றும் முகத்தில் படுகாயத்துடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிவசாமி சிகிச்சை நள்ளிரவில் பலனின்றி உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக கோவை மேற்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செப். 24-ல் நேரடி மாணவர் சேர்க்கை

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தனியார் இணைப்புக் கல்லூரிகளில் காலியாக உள்ள இளமறிவியல் இடங்களை நிரப்ப நேரடி மாணவர...

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம்

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், ப...

தேசிய அளவிலான சிறிய ரக ரேஸ் கார் பந்தயத்தில் கோவை ஈ.ஏ.எஸ்.ஏ., கல்லூரி மாணவர்கள் அணி இரண்டாமிடம்

கோவை நவக்கரையில் உள்ள ஈ.ஏ.எஸ்.ஏ., என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மெக்கானிக்கல் என்ஜினீயரிங் இரண்டாமாண்டு மாண...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் செப்டம்பர் 21ஆம் தேதி நிலவரப்படி 45.77 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி க...

கோவையில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் செப்டம்பர் 21 நிலவரப்படி ஆனைமலையை அடுத்த ஆழியாறு அணையில் நீர்மட்டம் 63.3 அடியாகவும், பொள்ளாச்சியை அடுத...

கோவை பீளமேடு கவுன்சிலர் பள்ளி உணவின் தரம் மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 21, 2026 அன்று வார்டு கவுன்சிலர் அம்பிகா தனப...