கோவையில் 103 பேருக்கு பணி ஆணை வழங்கிய மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி

நாடு முழுவதும் 10 லட்சம் பேருக்கு அரசு பணி வழங்கும் நிகழ்வை பிரதமர் மோடி தொடங்கி வைத்த நிலையில், கோவையில் 103 பேருக்கான பணி ஆணையை மத்திய இணையமைச்சர் வழங்கினார்.


கோவை: நாடு முழுவதும் 10 லட்சம் இளைஞர்களுக்கு அரசுப் பணி வழங்கும் வேலைவாய்ப்பு நிகழ்வை பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சி இந்தியா முழுவதும் உள்ள சுமார் 115 நகரங்களில் நடைபெற்றது.

இதில் முதற்கட்டமாக மத்திய அரசின் பல்வேறு துறைகளில் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட 75 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.



கோவை மாவட்டத்தில் இந்த நிகழ்ச்சி பீளமேட்டில் உள்ள பி.எஸ்.ஜி கல்லூரி வளாக அரங்கில் நடைபெற்றது. இதில் மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வில் பல்வேறு வங்கிகள் மற்றும் மத்திய அரசுத் துறைகளில் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 103 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கப்பட்டன.



இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.,க்கள் வானதி சீனிவாசன், சரஸ்வதி. தபால்துறை போஸ்மாஸ்டர் ஜெனரல் ஸ்மிதா அயோத்யா, தமிழக சர்கிள் முதன்மை போஸ்ட் மாஸ்டர் செல்வகுமார் ஆகியோரும் கலந்து கொண்டு பணி நியமன ஆணைகளை வழங்கினர்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...