போதைபொருட்களை ஒழிப்பதில் முதல்வர் தனி கவனம் செலுத்த வேண்டும் - கோவையில் பாமக தலைவர் அன்புமணி

கோவை கணபதி புதூர் பகுதியில் பாமக கட்சி அலுவலகத்தை திறந்து வைத்த பின் பேசிய அவர், போதைபொருட்கள் இளைஞர்களை சீரழித்து வருவதாகவும், போதை பொருட்களை ஒழிப்பதில் முதல்வர் தனி கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.



கோவை: கோவை மாவட்டம் கணபதி புதூர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட அலுவலகத்தை அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று திறந்து வைத்தார்.



இதனையடுத்து நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது, கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிர்வாகிகளை சந்தித்து வருவதாகவும் பல்லடத்தில் மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தேன்.



விசைத்தறிகளுக்கு மின் கட்டணத்தை உயர்த்தி இருப்பதால், பல்லடத்தில் மட்டும் 60 ஆயிரம் விசைத்தறிகள் மூடப்படும் நிலை இருக்கிறது. தமிழக அரசு இதில் கவனம் செலுத்தி, விசைத்தறிகளுக்கு கூடுதலாக மின்சாரம் வழங்க வேண்டும்.

பண்டிகை காலமான தற்போது ஆம்னி பேருந்து கட்டணத்தை உயர்த்தி இருக்கின்றனர். இதை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும். மின் கட்டண பிரச்சினைக்கு தீர்வாக மாதாந்திர மின்கட்டணம் கணக்கிட வேண்டும். திமுக தேர்தல் வாக்குறுதியில் மாதந்தோறும் மின்கணக்கீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது ஆனால் அதை அமல்படுத்தவில்லை.

மேலும் அத்திகடவு - அவினாசி திட்டம் கடந்த ஆட்சியில் நிதி ஒதுக்கீடு செய்து 95 சதவீத பணிகள் முடிந்துள்ளது. கடந்த 4 மாதங்களாக எந்த வேலையும் நடக்கவில்லை. இதில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.

இந்த மக்களின் நீண்ட கால கோரிக்கையான பாண்டியாறு - புன்னம்புழா, ஆனைமலை - நல்லாறு ஆகிய திட்டங்களை கேரள அரசிடம் பேசி இந்த திட்டத்தை செயல்படுத்த

நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். நீர் பாசன திட்டங்களுக்கு இந்த அரசு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். விவசாயத்தில் லாபம் இல்லாததால் அதை மனைகளாக விற்கும் நிலை இருக்கிறது.

கூடுதல் அணைகளை கட்டுவதுடன், பவானி அணையின் கொள்ளவை அதிகப்படுத்த வேண்டும். சென்னையில் புதிதாக 10 ஏரிகளை உருவாக்க வேண்டும். காவிரியில் வீணாகும் தண்ணீரை மோட்டார் மூலம் ஏரி, குளங்களை நிரப்ப வேண்டும்.



கோவை மண்டலம் என்பது மிகப்பெரிய சொத்து. இதை மத்திய,மாநில அரசுகள் பாதுகாக்க வேண்டும். பஞ்சுக்கும் ஜி.எஸ்.டி, நூலுக்கும் ஜி.எஸ்.டி, தயாரிக்கப்பட்ட துணிக்கும் ஜி.எஸ்.டி என விதிக்கப்படுவது பாதிப்பை ஏற்படுத்தும். அகில இந்திய ஒதுக்கீடு 15 சதவீதம் என்பது மாநில உரிமைக்கு எதிரானது. இன்றைய சூழலில் இது பொருந்தாது.

22 அலுவல் மொழிகளில் ஒன்றுதான் இந்தி, ஏன் இந்தியை திணிக்க வேண்டும்? இந்தி அவசியம் என்றால் கற்றுகொள்வார்கள், திணிக்க கூடாது. மத்திய அரசு பல வகைகளில் இந்தியை திணிப்பை செய்ய முயன்று வருகிறது. இந்தியை திணிக்கும் முயற்சியை விட்டு விடுங்கள்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்த நீதிபதி அருணா ஜெகதீசனின் அறிக்கை காவல் துறைக்கு ஒரு படிப்பு. யாருக்கும் யாரையும் சாகடிக்க உரிமை இல்லை. இந்த செயலை ஏற்றுக்கொள்ள முடியாது. சரியான அணுகுமுறையை காவல்துறை கடைபிடிக்கவில்லை 1987-ல் ஓரே நாளில் பா.ம.கவை சேர்ந்த 21 பேரை சுட்டு கொன்றார்கள். அன்று யாரும் கேட்கவில்லை. அன்று கேட்டு இருந்தால் தூத்துக்குடியில் இது போன்ற சம்பவம் இப்போது நடந்து இருக்காது.

காவிரியில் கடந்த 5 மாதத்தில் மட்டும் 530 டிஎம்சி தண்ணீர் கடலில் கலந்து கொண்டு இருக்கின்றது. இரு கட்சிகளும் நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஒரு லட்சம் கோடி நீர் மேலாண்மைக்கு என தனியாக ஒதுக்கீடு செய்யவேண்டும். நிலுவையில் உள்ள திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும். காலநிலை மாற்றம் இருக்கும் நிலையில், முன்னெச்சரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

பின்னலாடை தொழில் அதிகம் உள்ள இந்த பகுதியில் நூல்விலை உயர்வால் ஆயிரக்கணக்கான ஆலைகள் மூடப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும். இந்தியாவிற்கு அதிக அளவில் அந்நிய செலாவணி கொங்கு மண்டலத்தில் இருந்து கிடைக்கிறது. அதனால், இந்த பகுதிக்கு மத்திய அரசு தனி கவனம் செலுத்த வேண்டும். மாநில அரசு கடிதம் எழுதுவதோடு இல்லாமல் அதை வலியுறுத்த வேண்டும்

போதை பொருள் இளைய சமூகத்தை சீரழிக்கிறது. தனக்கு வரும் புகார்களில் அதிகம் இது தொடர்பாகதான் வருகிறது. கஞ்சா எண்ணெய், கஞ்சா சாக்லேட், கஞ்சா ஸ்டாம்ப் என அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக முதல்வர் தனி கவனம் செலுத்த வேண்டும். போதை ஒழிப்புத் துறைக்கு கூடுதல் காவலர்களை நியமிக்க வேண்டும். இதை முக்கிய பிரச்சினையாக முதல்வர் பார்க்க வேண்டும்.

நீலகிரி தேயிலைக்கு குறைந்த விலையே வழங்கப்படுகிறது. பசுந்தேயிலைக்கு கூடுதல் கூலி பெற்றுத்தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தீபாவளிக்கு டாஸ்மாக்கிற்கு இலக்கை தமிழக அரசு நிர்ணயம் செய்துள்ளது. இதை ஏற்க முடியாது இலக்கு நிர்ணயம் செய்து இருப்பது வெட்கக்கேடு். தீபாவளிக்கு முந்தய நாள், அடுத்த நாள் என 3 நாட்களும் டாஸ்மாக் கடையை மூட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் K ரங்கநாயகி ராமச்சந்தி...

காய்ச்சல் பாதிப்பை தடுக்க கோவை மாநகராட்சி புதிய நடவடிக்கை: 24 மணி நேர மையம் தொடக்கம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 24 மணி நேர காய்ச்சல் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் துவக்கப்பட்டுள்ளது. காய்ச்ச...

Facing Civic Issues in Your Ward? Submit Your Petition at Mayor’s Grievance Meet Tomorrow

Residents are invited to take part in the Corporation’s weekly Grievance Meeting and submit petitions regarding roads, s...

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...