கோவை ஆலாந்துறையில் செம்மண் கடத்திய லாரி பறிமுதல் - தப்பியோடிய ஓட்டுனர் மற்றும் உரிமையாளருக்கு போலீஸ் வலைவீச்சு

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே அனுமதியின்றி ஒன்றரை டன் செம்மண் கடத்திய லாரியை பறிமுதல் செய்த கனிம வளத்துறை அதிகாரிகள், போலீசாரிடம் ஒப்படைத்த நிலையில் தப்பியோடிய ஓட்டுனர் மற்றும் உரிமையாளரை தேடி வருகின்றனர்.



கோவை: கோவை தடாகம் பகுதியில் அரசு அனுமதியளித்த அளவை மீறி செம்மண் எடுக்கப்பட்ட நிலையில், அனுமதியின்றி கனிம வளக்கொள்ளை நடைபெற்றுள்ளதாக கூறி, செங்கல் சூளைகளுக்கு சீல் வைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து தொண்டாமுத்தூர், ஆலாந்துறை சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில மாதங்களாக செம்மண் எடுத்து கடத்தப்படுவதோடு சட்டவிரோதமாக செங்கல் உற்பத்தி செய்யப்படுவதாக புகார் எழுந்தது.

இந்நிலையில் ஆலாந்துறையில் இருந்து செம்மண் கடத்தப்படுவதாக கனிம வளத்துறையிருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், ஆலாந்துறையில் நேற்றிரவு கனிமவளத்துறை வட்டாச்சியர் பிரேமலதா தலைமையிலான அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வந்த லாரியை நிறுத்திய போது லாரியில் இருந்த ஓட்டுநர் திடீரென தப்பியோடினார். இதனையடுத்து லாரியை சோதனை செய்த போது, அதில் 1.5 யூனிட் செம்மண் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள் ஆலாந்துறை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய ஓட்டுநர் மற்றும் உரிமையாளரை தேடி வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...