கோவையில் முதல் முறையாக‌ 'Lantern Festival' ஆர்வமுள்ளோர் கலந்துகொள்ள முன்பதிவு செய்யவும் - மாநகராட்சி ஆணையாளர்‌ தகவல்

கோவை ஸ்மார்ட்‌ சிட்டி லிமிடெட்‌ தீபாவளி பண்டிகையையொட்டி “Sky Lantern Festival” என்னும்‌ நிகழ்ச்சியை வாலாங்குளம்‌ மேம்பாலத்தின் கீழ்‌ நடத்த ஏற்பாடு செய்துள்ளது.


கோவை: கோவையில் முதல் முறையாக‌ ஸ்மாட்‌ சிட்டி லிமிடெட்‌ “Sky Lantern Festival” என்னும் நிகழ்ச்சியை மிக பெரிய அளவில் நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சி வாலாங்குளம்‌ மேம்பாலத்தின் கீழ்‌ 22.10.2022 அன்று மாலை 6.00 மணி முதல்‌ இரவு 8.00 மணி வரை நடைபெற உள்ளது.

"Sky Lantern Festival” என்பது வான்‌ விளக்குகளை ஏற்றி வான்‌ நோக்கி அனுப்பும் நிகழ்வாகும். கோயம்புத்தூர்‌ ஸ்மார்ட்‌ சிட்டி லிமிடெட்‌ முதல் முறையாக இதை நடத்த ஏற்பாடு செய்துள்ளது.

இந்நிகழ்ச்சியில் வான்‌ விளக்கு திருவிழா, வானவேடிக்கை, பாடல்‌ நிகழ்ச்சி மற்றும்‌ உணவு வகைகளும்‌ இடம்பெற உள்ளது.

இந்நிகழ்ச்சியில்‌ கலந்து கொண்டு, வான்‌ விளக்குகளை ஏற்றி வான்‌ நோக்கி அனுப்ப விரும்புவோர்கள்‌ 7904163689/ 9566383542 என்ற எண்களில்‌ தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்‌ என சிறப்பு தகவலாக மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ தெரிவித்துள்ளார்கள்‌.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...