வேளாண் விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் உயர்தர பயிர் ரகங்களை பிரபலப்படுத்தும் கண்காட்சி - கோவை ஆட்சியர் அறிவிப்பு

உலக உணவு தினமான அக்டோபர் 19ஆம் தேதி தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக உழவர் இல்லத்தில் விவசாயிகள் பயனடையும் பொருட்டு உயர்தர உள்ளூர் பயிர் ரகங்களை பிரபலப்படுத்தும் கண்காட்சி நடைபெறுகிறது.


கோவை: கோவை மாவட்டம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையில் வேளாண் விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் தமிழக முதலமைச்சரின் வேளாண் நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு, உலக உணவு தினமான அக்டோபர் 19ஆம் தேதி அன்று தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக உழவர் இல்லத்தில் உயர்தர உள்ளூர் பயிர் ரகங்களை பிரபலப்படுத்தும் கண்காட்சி நடத்தப்பட உள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விழாவில் உள்ளூர் மற்றும் பாரம்பரிய பயிர்கள் மற்றும் ரகங்களை காட்சிப்படுத்துதல், விவசாயிகள் மற்றும் விஞ்ஞானிகள் கலந்துரையாடல், வேளாண்மை துறை தோட்டக்கலைத்துறை மற்றும் விதை சான்றளிப்பு, துறை அலுவலர்கள் மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக விஞ்ஞானிகள் பங்கேற்பு, உள்ளூர் மற்றும் பாரம்பரிய ரகங்களின் உற்பத்தியை மேம்படுத்துவது குறித்த பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது.

பாரம்பரிய உணவுகள் கண்காட்சி மற்றும் விற்பனை விவசாயிகளின் நலன் கருதி அவர்களிடம் உள்ளூர் மற்றும் பாரம்பரிய விதைகள் விற்பனை அரங்கம் அமைத்தல் ஆகியவை மேற்கொள்ளப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செப். 24-ல் நேரடி மாணவர் சேர்க்கை

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தனியார் இணைப்புக் கல்லூரிகளில் காலியாக உள்ள இளமறிவியல் இடங்களை நிரப்ப நேரடி மாணவர...

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம்

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், ப...

தேசிய அளவிலான சிறிய ரக ரேஸ் கார் பந்தயத்தில் கோவை ஈ.ஏ.எஸ்.ஏ., கல்லூரி மாணவர்கள் அணி இரண்டாமிடம்

கோவை நவக்கரையில் உள்ள ஈ.ஏ.எஸ்.ஏ., என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மெக்கானிக்கல் என்ஜினீயரிங் இரண்டாமாண்டு மாண...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் செப்டம்பர் 21ஆம் தேதி நிலவரப்படி 45.77 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி க...

கோவையில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் செப்டம்பர் 21 நிலவரப்படி ஆனைமலையை அடுத்த ஆழியாறு அணையில் நீர்மட்டம் 63.3 அடியாகவும், பொள்ளாச்சியை அடுத...

கோவை பீளமேடு கவுன்சிலர் பள்ளி உணவின் தரம் மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 21, 2026 அன்று வார்டு கவுன்சிலர் அம்பிகா தனப...