மத்திய பட்ஜெட்டில் 'சுகாதாரத் துறை' குறித்து மருத்துவர் ராஜேஸ் கண்ணா கருத்து!

நேற்று அறிவிக்கப்பட்ட மத்திய பட்ஜெட்டை 'வெற்று' பட்ஜெட்டாகவே பார்பதாக கோவை எலும்பியல் பிசியோதெரபி மருத்துவர் மற்றும் பிசியோதெரபி மருத்துவர்கள் சங்க செயலாளர் ராஜேஸ் கண்ணா தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், "சுகாதார துறை குறித்த மத்திய பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது. சுகாதார துறைக்கு 28 சதவிகிதம் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது மக்கள் தொகை உயர்வு, மருத்துவ செலவு, நோய்களின் தாக்கத்தை ஒப்பிடுகையில் மிக குறைவு".

நாட்டில் உள்ள 1.50 லட்சம் சுகாதார துணை நிலையங்களை தரம் உயர்த்தி, சுகாதார நலமையமாக உயர்த்தப்படும் என்கிற அறிவிப்பு, உயிர் காக்கும் மருத்துங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் விலைகுறைப்பு வரவேற்கத்தக்கது. 

ஆனால், அனைத்து மக்களுக்கும் அடிப்படை மருத்துவ வசதியை உறுதி செய்யும் சிறப்பு திட்டங்கள் எதுவும் இல்லை. 

அதேவேளை இவை அனைத்தும் கிராமப்புற மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் திட்டம் என்பதால் அந்த மையங்கள் அனைத்திலும் ஒரு பிசியோதெரபி மருத்துவர் பணி நியமனம் செய்ய வேண்டும். இதன் மூலம் மருந்து, மாத்திரைகள் இல்லாத பக்கவிளைவுகள் முற்றிலும் இல்லாத தரமான சிகிச்சைக்கு வழிவகை செய்யும்.

உலக சுகாதார அமைப்பின் அறிவுறுத்தலின் படி 10,000 பேருக்கு ஒரு பிசியோதெரபி மருத்துவர் வேண்டும் என்பது எந்த அறிவிப்பும் இல்லை. பிசியோதெரபி மருத்துவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான மத்திய பிசியோதெரபி கவுன்சில் அமைக்க வேண்டும் என்பதை சிறிதும் செவி சாய்க்காமல் இத்தாண்டும் வந்துள்ள மத்திய பட்ஜெட்டை வெற்று பட்ஜெட்டாகவே நான் பார்க்கிறேன்.

தமிழகத்திற்கு அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை என்பது இன்றும் என்ன நிலையில் உள்ளது என்பதை நினைத்து பார்க்கையில், இந்தாண்டு நிதிநிலை அறிக்கையில் இது குறித்த எந்த அறிவிப்பும் இல்லாதது கிராமபுற மாணவர்களின் மருத்துவர் கனவை பெரிதும் கேள்வி குறியாக்கியுள்ளது' என கோவை எலும்பியல் பிசியோதெரபி மருத்துவர் மற்றும் பிசியோதெரபி மருத்துவர்கள் சங்க செயலாளர் ராஜேஸ் கண்ணா தெரிவித்துள்ளார்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...