விபத்துக்கள் அதிகம் நடக்கும் இடங்களில் எச்சரிக்கை பலகைகள் பொருத்தும் பணி தீவிரம் : துணை ஆணையர் சரவணன் தகவல்


கோவை மாநகரில் நாளுக்கு நாள் வாகன நெரிசல் பெருகி வரும் நிலையில், விபத்துக்களும் ஆங்காங்கே நிகழ்ந்து வருகிறது. இந்த நிலையில், விபத்துக்கள் நிகழ்வதை குறைக்க கோவை மாநகர காவல் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நகரப்பகுதிகளில் அதிக விபத்துகள் நடக்கும் பகுதி கண்டறியப்பட்டு அங்கு எச்சரிக்கை வாசகங்கள் அடங்கிய பதாகைகள், வேகத்தடை போன்றவைகள் அமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல் துறை துணை ஆணையர் (போக்குவரத்து) சரவணன் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் கூறியதாவது :- 

கோவை மாநகரில் அதிக விபத்துகள் நடக்கும் இடங்கள் எவை?  என்று கண்டறிந்து அப்பகுதிகளில் எச்சரிக்கை வாசகங்கள் அடங்கிய பதாகைகள் அமைக்க முடிவு செய்தோம். அதன்படி, அவினாசி சாலையில் மிக அதிக விபத்துகள் நடப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து, குறிச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் அதிக விபத்துக்கள் நடப்பது கண்டறியப்பட்டது. தற்போது அப்பகுதிகளில் சாலை ஓரங்களில் 'எச்சரிக்கை, விபத்துப்பகுதி' போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் பொருத்தப்பட்டு வருகிறது. 

மேலும், குறிச்சி பகுதியில் வேகத்தடைகள் மற்றும் சாலையின் நடுவே டிவைடர்கள் அமைக்கவும் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த பணி விரைவில் முடிவடையும். 

காவல் துறை சார்பில் போக்குவரத்து குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன. அதோடு, வாகன ஓட்டிகள் அனைவரும் சாலை விதிகளை முறையாக கடைபிடித்தால் விபத்துக்கள் வெகுவாக குறையும். 

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...