இழந்தது கால் மட்டும் தான், தன்னம்பிக்கையை அல்ல என நிரூபிக்கும் மாற்றுத்திறனாளி யேசுதாஸ்!


கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் யேசுதாஸ். வயது 39 ஆன இவருக்கு மூன்று வயதிலேயே போலியோ தாக்குதலால் இரு கால்களும் செயல் இழந்துள்ளது. இருப்பினும் தற்போது தனது தன்னம்பிக்கை எனும் காலில் நின்று கடந்த 14 வருடமாக ஆண்களுக்கு முடி திருத்தம் செய்வது உள்ளிட்ட அலங்கார வேலைகளை செய்துவருகிறார்.

இதுகுறித்து அவர் நம்மிடம் கூறுகையில், எனக்கு நான்கு அக்காவும், ஒரு தம்பியும் உள்ளனர். எனது தந்தை தபால் ஊழியராக பணியாற்றி வந்தார். தற்போது அவர் இறந்து விட்டார். எனது அம்மா உடல்நிலைக் குறைவின் காரணமாக படுக்கையிலேயே இருக்க எனது சகோதரி தாயை பார்த்துக்கொள்கிறார். என் வருமானத்தின் பெரும் பகுதி எனது குடும்ப உறுப்பினர்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. என் உறவினர்களும் எனது குடும்பத்திற்கு ஆதரவளித்து வருகின்றனர். 



இரு கால்களை இழந்தாலும் யேசுதாஸால் தனது தன்னம்பிக்கை எனும் சுயகாலில் நிக்க முடியும் என்றால் இன்னும இது போல் உள்ள இளைஞர்கள் தன்னம்பிக்கையுடன் தனது வாழ்நாளை வென்றெடுக்கலாம். அவருக்கு ஒரு சலூன் கடையும் உள்ளது. அது கோவை, பெரியார் நகரில் செயல்பட்டு வருகிறது.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு யேசுதாஸின் உடலில் உள்ள குறைபாடு காரணமாக அவரது உறவினர்கள் அவரை ஈர நெஞ்சம் அறக்கட்டளையில் சேர்த்துள்ளனர். அங்கு தான் யேசுதாஸ் ஈரநெஞ்ச அரக்கட்டளையின் நிறுவனர் பி.மகேந்திரன் அவர்களை பார்த்துள்ளார். பின், அந்த அரக்கட்டளையில் உள்ள மற்ற மாற்றுத்திறனாளி நபர்களுக்கு யேசுதாஸ் முடி வெட்டுதல் உள்ளிட்ட அலங்கார வேலைகளை செய்துள்ளார்.

இது அப்படியே தொடர ஒரு முறை ஆர்.எஸ்.புரத்தில் செயல்பட்டு வரும் அறக்கட்டளை ஒன்றுக்கு வந்த யேசுதாஸ் அங்கேயும் உள்ள நபர்களுக்கு முடிவெட்டியுள்ளார். அதில் ஒரு சிலர் யேசுதாஸூக்கு பணம் கொடுத்துள்ளனர். 



இதுகுறித்து மகேந்திரனிடம் கூறிய யேசுதாஸ், தான் சொந்தமாக ஒரு சலூன் கடை வைக்க விரும்புவதாக கூறியுள்ளார். மற்ற மாற்றுத்திறனாளிகளைப் போல் இல்லாமல் தனது சுய சம்பாதியத்தில் வாழ் நினைக்கும் யேசுதாஸின் மனநிலையைப் புரிந்துகொண்ட மகேந்திரன், ஒரு சிலரின் உதவியுடன் பணம் திரட்டி பெரியார் நகரில் 2015 மே மாதம் சலூன் கடை வைத்துக்கொடுத்துள்ளார்.

இன்று யேசுதாஸின் முடித்திருத்த நிலையத்திற்கு ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் மூன்று வாடிக்கையாளர்கள் வருகிறார்கள். வார இருதிநாட்களில் அவரது கடையில் கூட்டம் அலைமோதுகிறது. நாற்காலியில் அமர்ந்தபடியே தனது வாடிக்கையாளர்களுக்கு அவர் சிறந்த சேவையினை செய்து வருகிறார். ஈர நெஞ்சம் அறக்ட்டளையில் இருக்கும் 25 நபர்களுக்கு அவர் தனது சேவைகளை வழங்கினார். தீபாவளிக்கு முன்பாக ஈரநெஞ்சம் அறக்கட்டளையில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு, படுத்தபடுக்கையாக இருக்கும் முதியோர்களுக்கும் யேசுதாஸ் நேரடியாகச் சென்று முடி வெட்டுதல் உள்ளிட்ட முக அலங்காரங்களை செய்துள்ளார். 



குறைபாடுகளுடன் இருந்தாலும் யேசுதாஸ் தனது வாழ்நாளை ஒரு தன்னம்பிக்கை நிரைந்ததாகவே பார்க்கிறார். துன்பப்படும் மக்களுக்கு தன்னாள் இயன்ற உதவிகளை செய்ய தயாராக இருக்கிறார். எனது குறைபாடுகளை விட தன்னம்பிக்கைக்கு மிகவும் வலிமை அதிகம் என்பதே அவரது தாரக மந்திரமாக உள்ளது.

Newsletter

சூலூர் நாகம நாயக்கன்பாளையம் குட்டையில் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரைக் கலக்கக் கடும் எதிர்ப்பு

கோவை சூலூர் அருகே பட்டணம் ஊராட்சிக்கு உட்பட்ட நாகம நாயக்கன் பாளையம் கிராமத்தில் உள்ள ஊராழி குட்டையை ஆழப்படுத்தவும், சுத்...

கோவை SRIT கல்லூரியில் மண்டல செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு 2.0 தொடக்கம்

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் மூன்று நாட்கள் நடைபெறும் மண்டல செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு 2.0 (RAS 2...

மாநில காவல்துறை பணித்திறன் போட்டியில் கோவை போலீஸ் நாய்களுக்கு இரண்டாம் பரிசு

ஆவடியில் உள்ள TSP Regimental Centre (RC)-இல் 21.09.2026 முதல் 25.09.2026 வரை நடைபெற்ற மாநில அளவிலான காவல்துறை பணித்திறன்...

கணியூர் சுங்கச்சாவடி அருகே 'தூய்மையே சேவை 2026' விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாவட்டம் கணியூர் சுங்கச்சாவடி அருகே 'தூய்மையே சேவை 2026' விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கணியூர் ஊராட்சி மற்றும...

கோவை இந்து முன்னணி சசிகுமார் கொலை வழக்கு: 4 பேருக்கு ஆயுள் தண்டனை

கோவை மாவட்ட இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிகுமார் கொலை வழக்கில் தடை செய்யப்பட்ட PFI அமைப்பை சேர்ந்த சதாம் உசேன், சுப...

கோவையில் மாணவர்களுக்கு வெறிநோய் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம், வார்டு எண்.63க்கு உட்பட்ட இராமநாதபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் செப்டம்பர் 25, 2...