சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் அந்நிய நேரடி முதலீடு குறித்து பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது


சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியின் வணிகவியல் துறை சார்பில் நேற்று எம்டிஐ அந்நிய நேரடி முதலீடு என்னும் தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது.

 

இக்கருத்தரங்கில் சங்கரா கல்லூரியின் முதல்வர் முனைவர் எச்.பாலகிருஷணன் வரவேற்புரையாற்றினார். இதில், சிறப்பு விருந்தினராக பாரதியார் பல்கலைக் கழக வணிகவியல் துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் சுமதி கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி கருத்தரங்கினை துவக்கி வைத்தார். விழா மலரினை கல்லூரியின் துணை இணை செயலர் நித்யா ராமச்சந்திரன், முனைவர் சுமதி, கல்லூரி முதல்வர், வணிகவியல் துறைத் தலைவர் முனைவர் சுரேஸ்பாபு ஆகியோர் கூட்டாக மலரினை வெளியிட்டனர்.



முதல் அமர்வில் புதுச்சேரி வணிகவியல் முதுகலை ஆராய்ச்சித்துறை முனைவர் எம்.கோச்சடை துவக்கி வைத்து உரையாற்றினார். இதில் கோவையைச் சுற்றியுள்ள பல்வேறு கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் ஆய்வு மாணவர்கள் கலந்துகொண்டு கருத்தரங்கில் கட்டுரைகளை வாசித்தனர்.

 

இம்முதல் அமர்வு கருத்தரங்க நிகழ்வுகளை சங்கரா மேலாண்மைக் கல்லூரியின் துறைத்தலைவர் முனைவர் கௌரி தொகுத்து வழங்கினார். மூன்றாம் பகுதிகளை முனைவர் எஸ்.சிவசங்கரி மற்றும் அரசுக்கல்லூரி உதவிப் பேராசிரியர் முனைவர் சிவஞானம் ஆகியோர் துவங்கி வைத்தனர். 

இவ்வமர்வை முனைவர் உமா மற்றும் மோகன விக்னேஷ் தொகுத்தளித்தனர். இக்கருத்தரங்கில் தமிழகத்தில் உள்ள பல நகரங்களிலிருந்தும் கோவையைச் சுற்றியுள்ள 15-க்கும் மேற்பட்ட கல்லூரி பேராசிரியர்கள் மற்றம் ஆய்வு மாணவர்கள் கலந்து கொண்டு கருத்தரங்க கட்டுரைகளை வாசித்தனர். 

விழாவின் நிறைவில் முனைவர் சிவஞானம் கருத்தரங்கில் பங்குபெற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...