கிராம சுகாதார செவிலியர் காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பணியாளர்கள் தேர்வு


மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள கிராம சுகாதார செவிலியர் பணியில் காலியாக உள்ள 2804 காலிப் பணியிடங்களுக்கும், கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவ பணிகள் துறையால் அறிவிக்கப்பட்ட 24 ரேடியோகிராபர் பணிக்காலியிடத்திற்கும் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இப்பணியிங்களுக்கு தகுதி வாய்ந்த பதிவுதாரர் பட்டியல் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 

பரிந்துரை செய்யப்பட்ட பதிவுதாரர்களின் விபரம் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக அறிவிப்பு பலகையில் வெளியிடப்பட்டுள்ளது.

தகுதியான மனுதாரர்கள் தங்களது பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதா என உறுதிசெய்து கொள்ளுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...