சிங்காநல்லூர்- வெள்ளலூர் மேம்பாலத்தில் மின் விளக்குகள் அமைக்கும் பணி துவக்கம்

சிங்காநல்லூர்- வெள்ளலூர் சாலையில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தில் தற்போது மின் விளக்குகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

கோவை மாவட்டம், சிங்காநல்லூர் காவல் நிலையம் அருகே வெள்ளலூருக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி அருகே ரயில்வே தண்டவாளம் அமைந்துள்ளது. கோவையில் இருந்து வெள்ளலூர் மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் இந்த சாலை வழியாகதான் செல்கின்றன.



இதனால், ரயில்வே தண்டவாளம் அருகே மேம்பாலம் அமைக்கப்பட்டு தற்போது மக்கள் பயன்பாட்டில் உள்ளது. இருப்பினும் அந்த மேம்பாலத்தில் மின் விளக்குகள் இல்லை எனவும், இதனால் இரவு நேரங்களில் அதிகப்படியான விபத்துகள் ஏற்படுவதாகவும் அப்பகுதி வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டி வந்தனர்.

இதனிடையே, தற்போது சிங்காநல்லூர்- வெள்ளலூர் இடையிலான மேம்பாலத்தில் மின் விளங்குகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Newsletter

சூலூர் நாகம நாயக்கன்பாளையம் குட்டையில் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரைக் கலக்கக் கடும் எதிர்ப்பு

கோவை சூலூர் அருகே பட்டணம் ஊராட்சிக்கு உட்பட்ட நாகம நாயக்கன் பாளையம் கிராமத்தில் உள்ள ஊராழி குட்டையை ஆழப்படுத்தவும், சுத்...

கோவை SRIT கல்லூரியில் மண்டல செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு 2.0 தொடக்கம்

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் மூன்று நாட்கள் நடைபெறும் மண்டல செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு 2.0 (RAS 2...

மாநில காவல்துறை பணித்திறன் போட்டியில் கோவை போலீஸ் நாய்களுக்கு இரண்டாம் பரிசு

ஆவடியில் உள்ள TSP Regimental Centre (RC)-இல் 21.09.2026 முதல் 25.09.2026 வரை நடைபெற்ற மாநில அளவிலான காவல்துறை பணித்திறன்...

கணியூர் சுங்கச்சாவடி அருகே 'தூய்மையே சேவை 2026' விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாவட்டம் கணியூர் சுங்கச்சாவடி அருகே 'தூய்மையே சேவை 2026' விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கணியூர் ஊராட்சி மற்றும...

கோவை இந்து முன்னணி சசிகுமார் கொலை வழக்கு: 4 பேருக்கு ஆயுள் தண்டனை

கோவை மாவட்ட இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிகுமார் கொலை வழக்கில் தடை செய்யப்பட்ட PFI அமைப்பை சேர்ந்த சதாம் உசேன், சுப...

கோவையில் மாணவர்களுக்கு வெறிநோய் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம், வார்டு எண்.63க்கு உட்பட்ட இராமநாதபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் செப்டம்பர் 25, 2...