ஜெம் மருத்துவமனை முதல் முறையாக தென்னிந்தியாவில் லேப்பிராஸ்கோப்பி மூலம் கல்லீரல் தானம் அறுவை சிகிச்சை


ஜெம் மருத்துவமனை மற்றும் ஜெம் மெதந்தா இணைந்து முதல் முறையாக தென்னிந்தியாவில்  கல்லீரல் தானம் அறுவை சிகிச்சை லேப்பிராஸ்கோப்பி முறையில் செய்துள்ளது. ஜெம் மருத்துவமனை தலைவர் டாக்டர் பழனிவேலு லேப்பிராஸ்கோப்பி முறையில் கல்லீரல் தானம் அறுவை சிகிச்சை செய்தார். மெதந்தாவின் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஷாயின் நோயாளிக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்தார். 



கோவை ஜெம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பாலசுப்ரமணியம் என்பவர் கல்லீரல் நோயால் 1 வருட காலமாக அவதிப்பட்டு வந்தார். இதில் அவருக்கு கல்லீரலில் புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. எனவே அவருக்கு அவரது மனைவி ஷீபா மூலமாக தனது வலது பக்க கல்லீரலை தானமாக வழங்கினார். எனவே அவருக்கு லேப்பிராஸ்கோப்பி முறையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஷீபா 4-5 நாட்களில் குணமடைந்து விட்டார். அவரது கணவர் இன்னும் ஓரிரு நாளில் குணமடைந்து வீடு திரும்பவுள்ளதாகவும் மருத்துவர்கள் கூறினார். 

இது குறித்து ஜெம் மருத்துவமனை தலைவர் டாக்டர் பழனிவேலு கூறுகையில்; வெளிநாடுகளில் 72-80 சதவீதம் வரை அதிக அளவில் உடலுறுப்பு தானம் மூலமாக லேப்பிராஸ்கோப்பி அறுவை சிகிச்சை செய்து வருகின்றனர். இந்தவகையான உடலுறுப்பு தானத்தில் கல்லீரல் பாதிப்படைந்தவர்களுக்கு இரண்டு வகையாக கிடைக்க வாய்ப்புள்ளது. ஒன்று மூளைச்சாவு அடைந்தவர்கள் மற்றொன்று நெருங்கிய சொந்தங்கள் - வேறு பல காரணங்களால் மூளைச்சாவு அடைந்தவர்களின் உறவினர்களால் உறுப்பு தானம் செய்ய மேலை நாடுகள் போல் முன்வருவதில்லை. இதனால் இந்தியா மற்றும் ஆசிய கண்டத்தில் சொந்தபந்தங்கள் உறுப்பு தானம் அதிக அளவில் உள்ளது. கல்லீரல் தானம் செய்தால் 35-40 நாட்களில் திரும்ப வளர்ந்துவிடும் இத்தனித்தன்மை கல்லீரலுக்கு மட்டுமே உள்ளது. கல்லீரலை பெற்று கொண்டவர்களுக்கும் அக்கல்லீரல் 1-2 மாதங்களில் வளர்ந்து விடும். இதுபோன்ற கல்லீரல் தானம் லேப்பிராஸ்கோப்பி அறுவை சிகிச்சை தெனிந்தியாவில் ஜெம் மருத்துவமனை முதல் முறையாக செய்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

சூலூர் நாகம நாயக்கன்பாளையம் குட்டையில் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரைக் கலக்கக் கடும் எதிர்ப்பு

கோவை சூலூர் அருகே பட்டணம் ஊராட்சிக்கு உட்பட்ட நாகம நாயக்கன் பாளையம் கிராமத்தில் உள்ள ஊராழி குட்டையை ஆழப்படுத்தவும், சுத்...

கோவை SRIT கல்லூரியில் மண்டல செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு 2.0 தொடக்கம்

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் மூன்று நாட்கள் நடைபெறும் மண்டல செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு 2.0 (RAS 2...

மாநில காவல்துறை பணித்திறன் போட்டியில் கோவை போலீஸ் நாய்களுக்கு இரண்டாம் பரிசு

ஆவடியில் உள்ள TSP Regimental Centre (RC)-இல் 21.09.2026 முதல் 25.09.2026 வரை நடைபெற்ற மாநில அளவிலான காவல்துறை பணித்திறன்...

கணியூர் சுங்கச்சாவடி அருகே 'தூய்மையே சேவை 2026' விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாவட்டம் கணியூர் சுங்கச்சாவடி அருகே 'தூய்மையே சேவை 2026' விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கணியூர் ஊராட்சி மற்றும...

கோவை இந்து முன்னணி சசிகுமார் கொலை வழக்கு: 4 பேருக்கு ஆயுள் தண்டனை

கோவை மாவட்ட இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிகுமார் கொலை வழக்கில் தடை செய்யப்பட்ட PFI அமைப்பை சேர்ந்த சதாம் உசேன், சுப...

கோவையில் மாணவர்களுக்கு வெறிநோய் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம், வார்டு எண்.63க்கு உட்பட்ட இராமநாதபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் செப்டம்பர் 25, 2...