அசிஸ்டன்ட் ஷாப்பிங் கியாஸ்க் இயந்திரத்தை அறிமுகப்படுத்திய ஒன்லிஸ்டேபில்.காம்


கோவையின் முதன்மையான இணையதள வர்த்தக நிறுவனமான ஒன்லிஸ்டேபில்.காம் அசிஸ்டன்ட் ஷாப்பிங் கியாஸ்க் என்னும் ஒரு புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.



இந்த கியாஸ்க்கை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை ஆர்டர் செய்யலாம். 

இச்சேவையின் மூலம் குறிப்பாக நடுத்தர மற்றும் அதற்கும் கீழுள்ள மக்களின் தேவை சிறப்பான முறையில் பூர்த்தியடையும்.

மேலும், இத்திட்டத்தின் மூலம் வாங்கும் பொருட்களுக்கு டிஜிட்டல் முறையில் பணப் பரிவர்த்தனையும் செய்யலாம்.

இத்திட்டத்தை மேலும் 15 ஆயிரம் குடியிருப்பு பகுதிகளுக்கு விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் சென்னை மற்றும் பெங்களூர் பகுதிகளுக்கும் இத்திட்டம் விரிவு படுத்தப்படும்.

கோவையில் மட்டும் அசிஸ்டன்ட் ஷாப்பிங் கியாஸ்க் மூலம் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு தற்போது பயனடையும் வகையில் உள்ளது. இதன் மூலம் நுகர்வோர்கள் பொருட்களை பெற்று பயனடைவது மட்டுமின்றி சில சேமிப்பு சலுகைகளும் உள்ளது.

இந்த சேவையினை வழங்குவதற்காக முன்னணி சில்லரை வர்த்தக நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.



மளிகை பொருட்கள், ஆர்கானிக் பொருட்கள், கன்சியுமர் டுயூரபில்ஸ், துணி வகைகள், கேட்டரர்ஸ், வாகனங்கள், வாடகை குடியிருப்பு, குடியிருப்பு விற்பணை, விமானச் சீட்டு பதிவு, தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள், டேக்சி சேவை, மொபைல் போன், வீட்டு உபயோகப் பொருட்கள், யூட்டிலிட்டி சர்வீசஸ், ஆபரணங்கள், பட்டுப்புடவை கடைகள் உள்ளிட்டவை இதில் இடம் பெற்றுள்ளன.

இதனை கியாஸ்க் மூலம் வாங்கும் பொழுது நுகர்வோர்களுக்கு சிறப்புத் தள்ளுபடி மற்றும் சிறப்புச் சேவைகள் வழங்கப்படும்.

Newsletter

சூலூர் நாகம நாயக்கன்பாளையம் குட்டையில் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரைக் கலக்கக் கடும் எதிர்ப்பு

கோவை சூலூர் அருகே பட்டணம் ஊராட்சிக்கு உட்பட்ட நாகம நாயக்கன் பாளையம் கிராமத்தில் உள்ள ஊராழி குட்டையை ஆழப்படுத்தவும், சுத்...

கோவை SRIT கல்லூரியில் மண்டல செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு 2.0 தொடக்கம்

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் மூன்று நாட்கள் நடைபெறும் மண்டல செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு 2.0 (RAS 2...

மாநில காவல்துறை பணித்திறன் போட்டியில் கோவை போலீஸ் நாய்களுக்கு இரண்டாம் பரிசு

ஆவடியில் உள்ள TSP Regimental Centre (RC)-இல் 21.09.2026 முதல் 25.09.2026 வரை நடைபெற்ற மாநில அளவிலான காவல்துறை பணித்திறன்...

கணியூர் சுங்கச்சாவடி அருகே 'தூய்மையே சேவை 2026' விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாவட்டம் கணியூர் சுங்கச்சாவடி அருகே 'தூய்மையே சேவை 2026' விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கணியூர் ஊராட்சி மற்றும...

கோவை இந்து முன்னணி சசிகுமார் கொலை வழக்கு: 4 பேருக்கு ஆயுள் தண்டனை

கோவை மாவட்ட இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிகுமார் கொலை வழக்கில் தடை செய்யப்பட்ட PFI அமைப்பை சேர்ந்த சதாம் உசேன், சுப...

கோவையில் மாணவர்களுக்கு வெறிநோய் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம், வார்டு எண்.63க்கு உட்பட்ட இராமநாதபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் செப்டம்பர் 25, 2...