வால்பாறையை அடுத்துள்ள வரட்டுப்பாறை எஸ்டேட்டில் யானைகள் அட்டகாசம்

வால்பாறையை அடுத்துள்ள வரட்டுப்பாறை எஸ்டேட்டில் நேற்று நள்ளிரவில் 5 காட்டு யானைகள் அப்பகுதியில் முகாமிட்டு பெருத்த சேதத்தை ஏற்படுத்தியது. 



இதில் அங்கு உம்மர் என்பவர் நடத்தி வந்த டீக்கடையை உடைத்த யானைகள் கடையில் இருந்த மாவுப் பொருட்கள், பிஸ்கட் போன்ற தின்பண்டங்களையும் சேதப்படுத்தியது. கடையின் கட்டிடமும் சேதமடைந்தது. 

இதே போல் அருகில் வசிக்கும் தேயிலை தோட்டத் தொழிலாளி அன்புச் செழியன் என்பவரது வீட்டின் ஓடுகளையும் காட்டு யானைகள் உடைத்தது. அதுமட்டுமல்லாமல் நிர்வாகத்தின் சார்பாக அமைக்கப்பட்டுள்ள மாட்டுத் தொழுவத்தையும் உடைத்தது. இதனால் அப்பகுதி மக்கள் இரவு முழுவதும் அச்சத்தில் ஆழ்ந்தனர். 

தொடர்ந்து பல எஸ்டேட் பகுதிகளிலும் யானைகள் இரவு நேரங்களில் தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து வீடுகளை சேதப்படுத்தி வருகிறது. 

எனவே வனத்துறையினர் தக்க நடவடிக்கை எடுத்து யானைகள் முகாமிட்டுள்ள பகுதியை கண்டறிந்து யானைகளை காட்டுக்குள் விரட்டினால் பொருட்சேதம் மட்டுமல்லாமல் உயிர்ச்சேதத்தையும் தவிர்க்கலாம் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...