கோவை மாநகர காவல் ஆணையர் பதவி விலக வேண்டும்: அனைத்து முற்போக்கு சனநாயக இயக்கங்களின் கூட்டியக்கம் வலியுறுத்தல்


கோவையில் ஜல்லிக்கட்டு வேண்டி வ.உ.சி.மைதானதில் நடைபெற்ற போரட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, போலீசார் அவர்களை தடியடி நடத்தி கலைத்தனர்.

இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய கோவை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ், சில அமைப்புகள் மற்றும் கட்சியின் பெயரை சொல்லி, அவர்களுடனான தொடர்பை மாணவர்கள் முறித்துகொள்ள வேண்டும் என்றும், தோழர் என்று கூறிக்கொண்டு மாணவர்களிடம் பேசுபவர்களிடமும் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டாம் என்று கூறினார். இதற்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.

இதை தொடர்ந்து,  நாம் தமிழர், புரட்சிகர மாணவர் முன்னணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ) மற்றும் இந்திய இசுலாமிய மாணவர் அமைப்பு போன்ற 22 அமைப்புகள், அனைத்து முற்போக்கு சனநாயக இயக்கங்களின் கூட்டியக்கமாக ஒன்றினைந்து இன்று கோவை பிரஸ்கிளப்பில் பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தினர்.



 

இதில் கலந்து கொண்ட மக்கள் சிவில் உரிமைக்கழகத்தின் மாநில துணை செயலாளர் பொன்சந்திரன் கூறியதாவது :-

கோவையில் அமைதியாக நடைபெற்ற போரட்டத்தை சீர்குலைத்ததே காவல்துறைதான்.

ஒவ்வொரு இயக்கத்தினரையும் குறிவைத்து தாக்கியிருக்கிறது கோவை மாநகர காவல் துறை. மேலும், உணர்வுப்பூர்வமாக போராடிய சில அமைப்புகளை தேச துரோகிகள் என முத்திரை குத்த பார்க்கின்றனர்.

'தோழர்' என்பது உன்னதமான வார்த்தை. பகத்சிங் முதல் சிங்காரவேலன் வரை ஒற்றுமை உணர்வை வெளிப்படுத்திய வார்த்தை. இப்படியான வார்த்தையை பயங்கரவாத வார்த்தையாக சித்தரித்துள்ளனர்  'தோழர்' என்று கூறுபவர்களுடனான பேச்சுவார்த்தையை முறித்துக்கொள்ளுங்கள் மாணவர்களே என்று காவல் ஆணையர் அமல்ராஜ் கூறியுள்ளார். இது அரசியல் சாசனத்திற்கு எதிரனது. போலீசார் கூறிய இந்த அவச்சொல்லை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். இல்லையென்றால் இந்த கூட்டியக்கத்தின் சார்ப்பில் போராட்டங்கள் நடத்தப்படும்.

காவல் துறை அராஜகத்தை மறைத்துக்கொள்வதற்கான முயற்சியே இது.

அரசியல் சாசனத்திற்கு எதிராக பேசிய காவல் ஆணையர் அமல்ராஜை இடை நீக்கம் செய்ய வேண்டும்.

மேலும், இந்த பிரச்சனையில் கைது செய்யப்பட்டவர்கள் உடனடியாக விடுதலை செய்வதுடன் பாதிக்கபட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கிறோம்.

இந்த கோரிக்கையின் மிது நடவடிக்கை இல்லை என்றால் தொடர்ந்து தமிழகத்தில் பல போராட்டங்கள் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

சூலூர் நாகம நாயக்கன்பாளையம் குட்டையில் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரைக் கலக்கக் கடும் எதிர்ப்பு

கோவை சூலூர் அருகே பட்டணம் ஊராட்சிக்கு உட்பட்ட நாகம நாயக்கன் பாளையம் கிராமத்தில் உள்ள ஊராழி குட்டையை ஆழப்படுத்தவும், சுத்...

கோவை SRIT கல்லூரியில் மண்டல செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு 2.0 தொடக்கம்

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் மூன்று நாட்கள் நடைபெறும் மண்டல செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு 2.0 (RAS 2...

மாநில காவல்துறை பணித்திறன் போட்டியில் கோவை போலீஸ் நாய்களுக்கு இரண்டாம் பரிசு

ஆவடியில் உள்ள TSP Regimental Centre (RC)-இல் 21.09.2026 முதல் 25.09.2026 வரை நடைபெற்ற மாநில அளவிலான காவல்துறை பணித்திறன்...

கணியூர் சுங்கச்சாவடி அருகே 'தூய்மையே சேவை 2026' விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாவட்டம் கணியூர் சுங்கச்சாவடி அருகே 'தூய்மையே சேவை 2026' விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கணியூர் ஊராட்சி மற்றும...

கோவை இந்து முன்னணி சசிகுமார் கொலை வழக்கு: 4 பேருக்கு ஆயுள் தண்டனை

கோவை மாவட்ட இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிகுமார் கொலை வழக்கில் தடை செய்யப்பட்ட PFI அமைப்பை சேர்ந்த சதாம் உசேன், சுப...

கோவையில் மாணவர்களுக்கு வெறிநோய் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம், வார்டு எண்.63க்கு உட்பட்ட இராமநாதபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் செப்டம்பர் 25, 2...