கோயமுத்தூர் யெங் இந்தியன் சேப்டர்ஸ் சார்பில் இன்று நடிகர் ஸ்ரீகாந்த் "கோவை விழா"வினை துவக்கி வைக்கிறார்


கோயமுத்தூர் 'யெங் இந்தியன்' சேப்டர்ஸ் அமைப்பின் சார்பில் இன்று "கோவை விழா 2017" துவக்க நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

கோவை மாவட்டத்தின் பிரபலமான புரூக்பீல்ட் வனிகவளாகத்தில் நடைபெறவுள்ள இதன் துவக்க நிகழ்ச்சியில் நடிகர் ஸ்ரீகாந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்று துவக்கி வைக்க உள்ளார். 

இதைத்தொடர்ந்து இந்நிகழ்ச்சியில், கோயமுத்தூர் யெங் இந்தியன் சேப்டர்ஸ் அமைப்பினரால் உருவாக்கப்பட்ட "கோவை விழா பாட்டு" வெளியீடு நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.

மேலும், கடந்த ஒரு வருடமாக யெங் இந்தியன் அமைப்பினரால் மேற்கொள்ளப்பட்ட சமூகச் சேவை, 'நோ ஹாரன்', குழந்தைகள் மீதான வன்முறைகள் குறித்த விழிப்புணர்வு, 'ஸ்வச் பாரத்' தூய்மை பணி உள்ளிட்டவை குறித்து வீடியோவும் வெளியிடப்பட உள்ளது. தொடர்ந்து, கோவையின் சமூக மேம்பாட்டாளர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் கவுரவப்படுத்தப்பட உள்ளனர். பின், நடிகர் ஸ்ரீகாந்த் பார்வையாளர்களிடம் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார்.

முன்னதாக, கோவை விழா இன்று துவங்கி வரும் பிப்ரவரி 5ம் தேதி வரை புரூக்பீல்ட் வனிகவளாகம் உட்பட மாவட்டத்தின் பல்வேறு முக்கியப் பகுதிகளில் நடைபெறும் எனவும், இவ்விழாவின் போது பல்வேறு தனியார் அமைப்புகள் கோவை யெங் இந்தியன் சேப்டர்ஸ் உடன் இணைந்து அவ்வமைப்பின் பேனரின் கீழ் 90 நிகழ்ச்சிகள் நடத்தப்படும் எனவும் இதன் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

மேலும், கடந்த வருடத்தை விட இவ்வருடம் பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளதால் ஏராளமானோர் இதில் பங்குபெருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...