சுவரொட்டிகளை கிழித்த காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பா.ஜ.க.வினர் புகார்


குடியரசு தினத்தை முன்னிட்டு நரேந்திரமோடியின் புகைப்படம் மற்றும் தேசியகொடி அச்சிடப்பட்ட  சுவரொட்டிகளை கிழித்த காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பா.ஜ.க.வினர் காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

நாட்டின் 68வது குடியரசுதின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது, இந்த நிலையில் கோவையில் பல பகுதிகளில் குடியரசு தின வாழ்த்து தெரிவிக்கும் வகையில் பா.ஜ.க. சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுஇருந்தது, இந்த சுவரொட்டிகளில் பாரத பிரதமர்நரேந்திர மோடியில் புகைப்படம், தேசிய கொடியின் படம் உட்பட வாழ்த்து செய்தியும் அச்சிடப்பட்டிருந்தது, குனியமுத்தூர் பகுதியில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளை காவல்நிலைய உதவி ஆய்வாளர் ஜஸ்டின் உதயராஜ் மற்றும் சாய்பாபா காலணி பகுதியில் ஒட்டபட்டிருந்த போஸ்டர்களை நிலைய காவலர் சபீர் பாஷா ஆகியோர் கிழித்ததாக கூறி தேசிய கொடியை அவமதித்த அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க கோரி பா.ஜ.க.வின் மாவட்ட தலைவர் நந்தகுமார் தலைமையில் அக்கட்சியினர் கோவை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Newsletter

சூலூர் நாகம நாயக்கன்பாளையம் குட்டையில் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரைக் கலக்கக் கடும் எதிர்ப்பு

கோவை சூலூர் அருகே பட்டணம் ஊராட்சிக்கு உட்பட்ட நாகம நாயக்கன் பாளையம் கிராமத்தில் உள்ள ஊராழி குட்டையை ஆழப்படுத்தவும், சுத்...

கோவை SRIT கல்லூரியில் மண்டல செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு 2.0 தொடக்கம்

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் மூன்று நாட்கள் நடைபெறும் மண்டல செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு 2.0 (RAS 2...

மாநில காவல்துறை பணித்திறன் போட்டியில் கோவை போலீஸ் நாய்களுக்கு இரண்டாம் பரிசு

ஆவடியில் உள்ள TSP Regimental Centre (RC)-இல் 21.09.2026 முதல் 25.09.2026 வரை நடைபெற்ற மாநில அளவிலான காவல்துறை பணித்திறன்...

கணியூர் சுங்கச்சாவடி அருகே 'தூய்மையே சேவை 2026' விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாவட்டம் கணியூர் சுங்கச்சாவடி அருகே 'தூய்மையே சேவை 2026' விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கணியூர் ஊராட்சி மற்றும...

கோவை இந்து முன்னணி சசிகுமார் கொலை வழக்கு: 4 பேருக்கு ஆயுள் தண்டனை

கோவை மாவட்ட இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிகுமார் கொலை வழக்கில் தடை செய்யப்பட்ட PFI அமைப்பை சேர்ந்த சதாம் உசேன், சுப...

கோவையில் மாணவர்களுக்கு வெறிநோய் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம், வார்டு எண்.63க்கு உட்பட்ட இராமநாதபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் செப்டம்பர் 25, 2...