கோவை மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் விநியோகம் மேற்கொள்வது குறித்து மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் மாநகராட்சிப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் மேற்கொள்வது குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இதில், மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தெரிவிக்கையில், "கோவை மாவட்டத்தில் பருவமழை இல்லாத காரணத்தினால் பொதுமக்கள் குடிநீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். குறிப்பாக 140 வருடங்களுக்கு முன்னர் பருவமழை இல்லாத காரணத்தினால் கோவை மாவட்டத்தில் இது போன்ற வறட்சி காணப்பட்டது. இருந்தாலும் கோவை மாநகராட்சி போர்க்கால அடிப்படையில் தேவையான குடிநீர் விநியோகம் அனைத்து வார்டு பகுதிகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. 

மேலும், சிறுவாணி, பில்லூர் மற்றும் இதர நீர் ஆதாரங்களைக் கொண்டு கோவை மாநகராட்சியிலுள்ள அனைத்து வார்டு பகுதிகளுக்கும் சமமாக 12 நாட்களுக்கு ஒருமுறை விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் விநியோகம் செய்யும் குடிநீர் வாகனங்களையும் கூடுதலாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், கோவை மாநகராட்சியில் சிறுவாணி குடிநீரை சார்ந்துள்ள பகுதியான மேற்கு மண்டலம் வடவள்ளி பகுதிகளான வார்டு எண் 15, 18, 19, 20 மற்றும் 21 ஆகிய 5 வார்டுகளுக்கும் ஒரு வார்டுக்கு இரண்டு குடிநீர் லாரிகள் என ஐந்து வார்டுகளுக்கும் தினந்தோறும் 10 குடிநீர் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

மேலும், இத்துடன் கூடுதலாக குறிச்சி, குனியமுத்தூர், செல்வபுரம் ஆகிய பகுதிகளுக்கு தலா இரண்டு லாரிகளும், வடக்கு மண்டலத்திற்கு ஒரு லாரியும் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

மேலும், குறிப்பாக மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சப்படுவதை தடுக்கும் விதமாக குடிநீர் விநியோகம் செய்யப்படும் பகுதிகளில் மின்சாரத்தை நிறுத்துவதற்கு குடிநீர் விநியோகப் பொறியாளர்கள் சம்மந்தப்பட்ட மின்சார வாரிய பொறியாளர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டது. 

குடிநீர் குழாய்களில் பழுது ஏற்பட்டால் உடனுக்குடன் பழுதினை சரிசெய்ய நடவடிக்கை எடுக்குமாறு பொறியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. கோவை மாநகராட்சியிலுள்ள பிற வார்டு பகுதிகளுக்கு இண்டர்லிங் செய்யப்பட்டு பில்லூர் குடிநீர் விநியோகம் செய்யப்படும். 

ஆகவே, பொது மக்கள் குடிநீரை வீணாக்காமல் மிகவும் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்." இவ்வாறு மாநகராட்சி ஆணையர் மற்றம் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி, அனைத்து மண்டல உதவி ஆணையாளர்கள், செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள், அனைத்து குடிநீர் விநியோகப் பொறியாளர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...