கோவை காவல் ஆணையர் அமல்ராஜுக்கு கண்டனம் தெரிவித்த கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா மாணவர் சங்கம்


ஜல்லிக்கட்டிற்கான மாணவர்களின் போராட்டத்தை கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா உள்ளிட்ட மாணவர் அமைப்பினர் திசைதிருப்பியதாக கோவை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் கூறியுள்ளதற்கு அந்த அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.



ஜல்லிகட்டு மீதான தடையை நீக்கி நிரந்தர சட்டம் கொண்டுவர வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுடன் பொதுமக்களும் இணைந்து போராட்டம் நடத்தினர். இந்நிலையில் போராட்டத்தை கை விடுமாறு காவல்துறையினர் போராட்டகாரர்களிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

ஆனால், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து செல்ல மறுத்ததையடுத்து காவல் துறையினர் பொதுமக்கள், இளைஞர்கள், மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தி போராட்டத்தை கலைத்தனர்.

இதனையடுத்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் நடந்தது. இந்த நிலையில் கோவை மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா உள்ளிட்ட சில மாணவ அமைப்புகள் மாணவர்களின் போராட்டத்தை திசைதிருப்பியதாக தெரிவித்தார்.

மாநகர காவல் ஆணையர் அமல்ராஜின் இத்தகைய பேச்சுக்கு அந்த அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் அப்துர் ரகுமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும், கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மீது காவல் துறை ஆணையர் அமல்ராஜ் அவதூறு பரப்பும் விதத்தில் பேசியதாகவும், அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாகவும் கூறிய அவர், தமிழக அரசு அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...