News
குடியரசு தினவிழா நிகழ்ச்சியில் பொதுமக்கள் பங்கேற்க கோவை மாவட்ட நிர்வாகம் அழைப்பு
SimpliCity News Team File Photo · 25 Jan 2017

கோவை காவலர் பயிற்சி மைதானத்தில் (பி.ஆர்.எஸ் மைதானம்) நாளை ஜனவரி 26ம் தேதி காலை 8 மணியளவில் குடியரசு தினவிழா நிகழ்ச்சி நடைபெறுகிறது.
மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் பங்கேற்று தேசிய கொடியினை ஏற்றிவைத்து, காவலர் அணிவகுப்பு மரியாதையை ஏற்க உள்ளார். இதனைத்தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகி மற்றும் அவர்களின் வாரிசுதாரர்களுக்கு சிறப்பு செய்து, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.
அதனைத் தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இவ்விழாவில் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்து தருமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Related stories
News
பல்வேறு தலைப்புகளின் ஆய்வு முடிவுகளை கோவை ஆட்சியரிடம் சமர்பித்த மாணவர்கள்!
05 Apr 2023
News
75th Independence Day: Tirupur District Collector hoists National Flag and provideds welfare assistance
15 Aug 2021
News
75th Independence Day Celebration in Coimbatore: Collector Sameeran accept guard of honor and hoists the National Flag
15 Aug 2021