கோவையில் தேசிய அளவிலான இறகுப் பந்துப் போட்டியினை பாமக அன்புமணி இராமதாஸ் துவக்கி வைத்தார்


கோவை, பாரதியார் பல்கலைக் கழகத்தில் தேசிய அளவிலான 15 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கான இறகுப்பந்து போட்டிகளை தமிழ்நாடு இறகுப்பந்து சங்கத் தலைவரும், பாமக மாநில இளைஞரணி தலைவருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் துவக்கி வைத்தார்.

கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் உள்ள உள்விளையாட்டு அரங்கில் தேசிய அளவிலான 15 வயதிற்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான இறகுப்பந்து போட்டிகள் இன்று துவங்கின. 

கோயமுத்தூர் இறகுப்பந்து சங்கமும், தமிழ்நாடு இறகுப்பந்து சங்கமும் இணைந்து நடத்தும் இப்போட்டிகள் வருகின்ற 29-ம் தேதி வரை 6 நாட்கள் நடைபெற உள்ளன. 



இந்த போட்டிகளில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 1600 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்த போட்டிகளை தமிழ்நாடு இறகுப்பந்து சங்கத்தலைவரும், பாமக மாநில இளைஞரணி தலைவருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் துவக்கி வைத்து, ஒரு மாணவருடன் அன்புமணி இராமதாஸ் சிறிது நேரம் இறகுப்பந்து விளையாடினார். 

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் இறகுப்பந்து போட்டிகளில் பல திறமையான வீரர்கள் இருந்த போதும், உள் அரங்குகள், பயிற்சி, உடற்தகுதி ஆகியவை மேம்படுத்த முறையான வசதிகள் இல்லை என தெரிவித்தார். 

தமிழ்நாடு இறகுப்பந்து சங்கத்தின் சார்பில் உள் கட்டமைப்பு வசதிகள், பயிற்சிகள் உள்ளிட்டவற்றை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், இறகுப்பந்து போட்டிகள் தொடர்பான விபரங்கள் இணையதளங்களில் பதிவிட்டு வருவதால் வெளிப்படை தன்மை நிலவி வருவதாகவும் தெரிவித்தார். இதன் காரணமாக திறமைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். 

இறகுபந்து உள் அரங்கள் கட்டமைப்புகள் அனைத்து மாவட்டங்களிலும் அரசு சார்பில் அமைக்கவும், சென்னை மற்றும் மதுரை பகுதிகளில் சிறப்பு பயிற்சி மையம் அமைக்க நிலம் ஒதுக்கவும் கோரி, தமிழக முதல்வரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளதாக அன்புமணி இராமதாஸ் தெரிவித்தார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...