மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையைக் கண்டித்து கோவை வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்


தமிழகம் முழுவதும் நேற்று ஜல்லிக்கட்டு விவகார போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்டோர் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தினர். இதில், மாணவர்களின் அறப்போராட்டத்திற்கு ஆதரவாக இருந்த வழக்கறிஞர்களையும் காவல்துறையினர் தாக்கினர்.

இந்த தாக்குதலால், பல மாணவர்கள், பெண்கள், வழக்கறிஞர்கள் படுகாயமடைந்து தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். சில இளைஞர்கள் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டு வருகிறது. 

இதனைத்தொடர்ந்து, மாணவர்கள் மீதும், பெண்கள், வழக்கறிஞர்கள் மீதும் தாக்குதல் நடத்திய காவல்துறையைக் கண்டித்து கோவை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் இன்று நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்தில், கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தாக்குதல் நடத்திய காவல்துறையினரைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பி தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.



Newsletter

சூலூர் நாகம நாயக்கன்பாளையம் குட்டையில் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரைக் கலக்கக் கடும் எதிர்ப்பு

கோவை சூலூர் அருகே பட்டணம் ஊராட்சிக்கு உட்பட்ட நாகம நாயக்கன் பாளையம் கிராமத்தில் உள்ள ஊராழி குட்டையை ஆழப்படுத்தவும், சுத்...

கோவை SRIT கல்லூரியில் மண்டல செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு 2.0 தொடக்கம்

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் மூன்று நாட்கள் நடைபெறும் மண்டல செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு 2.0 (RAS 2...

மாநில காவல்துறை பணித்திறன் போட்டியில் கோவை போலீஸ் நாய்களுக்கு இரண்டாம் பரிசு

ஆவடியில் உள்ள TSP Regimental Centre (RC)-இல் 21.09.2026 முதல் 25.09.2026 வரை நடைபெற்ற மாநில அளவிலான காவல்துறை பணித்திறன்...

கணியூர் சுங்கச்சாவடி அருகே 'தூய்மையே சேவை 2026' விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாவட்டம் கணியூர் சுங்கச்சாவடி அருகே 'தூய்மையே சேவை 2026' விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கணியூர் ஊராட்சி மற்றும...

கோவை இந்து முன்னணி சசிகுமார் கொலை வழக்கு: 4 பேருக்கு ஆயுள் தண்டனை

கோவை மாவட்ட இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிகுமார் கொலை வழக்கில் தடை செய்யப்பட்ட PFI அமைப்பை சேர்ந்த சதாம் உசேன், சுப...

கோவையில் மாணவர்களுக்கு வெறிநோய் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம், வார்டு எண்.63க்கு உட்பட்ட இராமநாதபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் செப்டம்பர் 25, 2...