மாணவர் போராட்டத்தில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை வேண்டும்- அன்புமணி இராமதாஸ்


மாணவர் போராட்டத்தில் கலவரம் நடந்தது தொடர்பாக ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும், அதற்காக பா.ம.க நீதிமன்றம் செல்லும் எனவும் அக்கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பா.ம.க மாநில இளைஞரணி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் பாரதியார் பல்கலைகழகம் மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கோவைக்கு வருகை தந்தார். 

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜல்லிக்கட்டிற்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல் துறையினர் தாக்குதல் நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்தார். 

தமிழ்நாடு முழுவதும் அமைதியாக நடந்த மாணவர் போராட்டத்திற்கு கலங்கம் ஏற்படுத்த காவல் துறையினர் திட்டமிட்டு கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி இருப்பதாகவும், சென்னையில் நடந்த கலவரத்திற்கு காவல் துறை தான் காரணம் எனவும் அவர் குற்றம்சாட்டினார். 

மேலும், ஆளும் கட்சிக்குள் உள்ள பிரச்சனைகளை மறைக்க இந்த தாக்குதல் நடந்து இருக்கலாம் எனவும், காவல் துறையினரே ஆட்டோ, குடிசை, வாகனங்களை கொளுத்தும் காட்சிகள் வெளியாகி இருப்பதாகவும், சமூக விரோதிகள் கலவரத்தை தூண்டி விட்டதாகவும் அவர் தெரிவித்தார். 

மேலும், கலவரம் தொடர்பாக ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்த வேண்டும் அல்லது சி.பி.ஐ விசாரணை நடத்தினால் தான் உண்மை வெளியாகும் எனவும் கூறிய அவர், அதற்காக பா.ம.க நீதிமன்றம் செல்லும் என தெரிவித்தார். 

கோவையை பொருத்த வரை அத்திக்கடவு- அவிநாசி, பண்டியாறு- புன்னம்புழா மற்றும் அட்டப்பாடியில் கேரள அரசு அணைக்கட்டுதல் ஆகிய 3 பிரச்சனைகள் இருப்பதாக குறிப்பிட்ட அவர், தமிழகத்தில் நீர் மேலாண்மையை மேம்படுத்த வேண்டியது அவசியம் என தெரிவித்தார். 

மத்திய பா.ஜ.க அரசு அடுத்த ஆண்டு கர்நாடக மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் கர்நாடக அரசிற்கு சாதகமாக செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டினார். 

பவானி ஆற்றில் கேரள அரசு அணைக்கட்டுதல், காவிரி  பிரச்சனை உள்ளிட்ட நதிநீர் பிரச்சனைகளுக்கு அனைத்து கட்சி கூட்டங்களை கூட்டி, பிரதமரை சந்தித்து அழுத்தம் தந்து தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினார்.

Newsletter

சூலூர் நாகம நாயக்கன்பாளையம் குட்டையில் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரைக் கலக்கக் கடும் எதிர்ப்பு

கோவை சூலூர் அருகே பட்டணம் ஊராட்சிக்கு உட்பட்ட நாகம நாயக்கன் பாளையம் கிராமத்தில் உள்ள ஊராழி குட்டையை ஆழப்படுத்தவும், சுத்...

கோவை SRIT கல்லூரியில் மண்டல செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு 2.0 தொடக்கம்

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் மூன்று நாட்கள் நடைபெறும் மண்டல செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு 2.0 (RAS 2...

மாநில காவல்துறை பணித்திறன் போட்டியில் கோவை போலீஸ் நாய்களுக்கு இரண்டாம் பரிசு

ஆவடியில் உள்ள TSP Regimental Centre (RC)-இல் 21.09.2026 முதல் 25.09.2026 வரை நடைபெற்ற மாநில அளவிலான காவல்துறை பணித்திறன்...

கணியூர் சுங்கச்சாவடி அருகே 'தூய்மையே சேவை 2026' விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாவட்டம் கணியூர் சுங்கச்சாவடி அருகே 'தூய்மையே சேவை 2026' விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கணியூர் ஊராட்சி மற்றும...

கோவை இந்து முன்னணி சசிகுமார் கொலை வழக்கு: 4 பேருக்கு ஆயுள் தண்டனை

கோவை மாவட்ட இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிகுமார் கொலை வழக்கில் தடை செய்யப்பட்ட PFI அமைப்பை சேர்ந்த சதாம் உசேன், சுப...

கோவையில் மாணவர்களுக்கு வெறிநோய் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம், வார்டு எண்.63க்கு உட்பட்ட இராமநாதபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் செப்டம்பர் 25, 2...