கோவையில் கைகளால் நெய்யப்பட்ட புடவைகளின் கண்காட்சி

கோவை : அறுவடையில் தொடங்கி இறுதி வடிவான புடவை வரை கைகளால் மட்டுமே உருவாக்கம் செய்யப்படும் புடவைகளின் கண்காட்சி கோவை ரேஸ் கோர்ஸில் நடைபெறுகிறது.


கோவை : அறுவடையில் தொடங்கி இறுதி வடிவான புடவை வரை கைகளால் மட்டுமே உருவாக்கம் செய்யப்படும் புடவைகளின் கண்காட்சி கோவை ரேஸ் கோர்ஸில் நடைபெறுகிறது. 



"இந்திய நாட்டில் பன்மைத்துவத்தை பறைசாற்றும் ஏதேனும் இருக்கிறது என்றால், அது நம் பழம்பெரும் உடையான புடவையாகத்தான் இருக்கும்" என ஜவுளி தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சி மாணவரான கபூர் சிஷ்தி தெரிவித்துள்ளார். இவரது வாழ்நாள் லட்சியமே புடவைகளின் மீதான நன்மதிப்புகளை மக்களுக்கு கொண்டுசேர்ப்பதுதான். சமீபமாக இவர் கோவையில் தனது புடவை கண்காட்சியை நடத்தத் திட்டமிட்டுள்ளார். 



கபூர் சிஷ்தி கூறுகையில், "புடவை என்பதை நான் வெறும் உடையாக மட்டும் பார்க்கவில்லை. ஒரு வகையில் அப்படி பார்ப்பது தவறும் கூட. நம் நாட்டின் பெரும்பான்மையான பெண்களால் அணியப்படுவது புடவை. ஒரே நாட்டில் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அதை வெவ்வேறு விதமாகப் புடவை உடுத்துவதன் மூலம் அவர்களது தனித்துவத்தை நிறுவிக் கொள்கிறார்கள், என்கிறார்.

இந்திய நாட்டின் ஒவ்வொரு பகுதிகளின் தனித்துவத்தை ஆவணப்படுத்தும் நோக்கத்துடன் செயல்படும் சிஷ்தி டான்பான் (Taanbaan) என்னும் அமைப்பை நிறுவியிருக்கிறார். இந்த அமைப்பின் மூலம் கையால் மட்டுமே நூற்கப்பட்ட பல்வேறு வகையான புடவைகளை தயாரித்து வருகிறார். அந்த புடைவைகள் அனைத்தும் பருத்தி, பட்டு, கதர் ஆகியவற்றால் செய்யப்படுகிறது. அதற்காகவே, அந்த நிறுவனம் ஆக்ரா, மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம் ஆகிய பகுதிகளில் பருத்தியைக் கொள்முதல் செய்கிறது. 



"அறுவடையில் தொடங்கி இறுதி வடிவான புடவை வரை கைகளால் மட்டுமே உருவாக்கம் செய்யப்படுகிறது. ஒரு புடவை தயாரிக்க 16 முதல் 20 பேர் வரை வேலை செய்கிறார்கள். புடவை உடுத்தும் அந்த கலையை அழியாமல் பாதுகாப்பதில் ஒரு பெருமை உள்ளது. இதற்கிடையில், கதர் துணிகளுக்கான வரவேற்பு சமீபத்தில் அதிகரித்துள்ளது. இளைய சமூகத்தினர் புடவை அணிவதைக் குறைவாக எண்ண வேண்டாம். ஒரு புடவையை 108 விதமாக அணிந்து கொள்ளமுடியும், என்கிறார் சிஸ்தி. 

இது பற்றி "சாரீஸ் : ட்ரடிஷன் அண்ட் பையாண்ட்" என்ற தனது புத்தகத்தில் எழுதியுள்ளதாகக் கூறுகிறார் சிஸ்தி. இவருடைய தனித்துவம் பொருந்திய புடவைகளின் கண்காட்சி இன்று மாலை ரேஸ் கோர்ஸில் உள்ள புகாரியில் நடைபெறவுள்ளது. 



இது குறித்து புகாரி நிறுவனர் கூறுகையில், "நூற்புத்தொழில் மீதான பற்றுதலும் கதர் துணிகளை உற்பத்தி செய்ய ஈடுபடுத்தப்பட்ட ஆற்றலும் அந்த கண்காட்சியை இந்த நகரத்துக்கு கொண்டுவரச் செய்தது. நாங்கள் தயாரிக்கும் கதர் ஆடைகளைப் பிரபலப்படுத்தும் விதமாக இதை செய்கிறோம். இந்த கதர் துணிகள் என்பது சுந்திரத்திற்கு சமமாகும்” என்றார். 

Newsletter