உரங்களை பதுக்கினால் கடும் நடவடிக்கை; காரீப் சாகுபடிக்கு 12,166 டன் உரங்கள் இருப்பு: கோவை வேளாண் அதிகாரி

காரீப் சாகுபடிக்காக கோவை மாவட்டத்தில் 12,166 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில், உரங்களை பதுக்குதல் அல்லது MRP விலையை விட அதிகமாக விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண்மை துறை எச்சரித்துள்ளது.

Coimbatore:

கோவை மாவட்டத்தில் எதிர்வரும் காரீப் சாகுபடிக்குத் தேவையான உரங்கள் போதுமான அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும், உரங்களை பதுக்குதல் அல்லது அதிக விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வேளாண்மை இணை இயக்குநர் தமிழ்செல்வி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டத்தில் யூரியா 3,861 மெட்ரிக் டன், டிஏபி 1,056 மெட்ரிக் டன், பொட்டாஷ் 2,548 மெட்ரிக் டன், சூப்பர் பாஸ்பேட் 1,228 மெட்ரிக் டன் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்கள் 3,473 மெட்ரிக் டன் என மொத்தம் 12,166 மெட்ரிக் டன் உரங்கள் தனியார் மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் மண் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் அல்லது தமிழ் மண்வள செயலியில் வழங்கப்படும் பரிந்துரைகளுக்கு ஏற்ப உரங்களை பயன்படுத்தி அதிக மகசூல் பெற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

உர விற்பனையாளர்கள் யூரியா மற்றும் டிஏபி உள்ளிட்ட அனைத்து உரங்களையும் விவசாயிகளின் சாகுபடி பரப்பு மற்றும் பயிர் தேவைக்கு ஏற்ப ஆதார் எண் பதிவு செய்து மட்டுமே வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், உர விற்பனை செய்யும் போது விவசாயிகளின் முகவரி, தொலைபேசி எண் மற்றும் கையொப்பத்துடன் பதிவேடு பராமரித்து, விற்பனை ரசீது வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நானோ யூரியா, நானோ டிஏபி, உயிர் உரங்கள் மற்றும் நுண்ணூட்டச் சத்து உரங்களை பயன்படுத்துவதன் மூலம் உர பயன்பாட்டை குறைத்து, மண்ணின் வளத்தை அதிகரித்து, உற்பத்திச் செலவைக் குறைக்க முடியும் என்றும் வேளாண்மை துறை தெரிவித்துள்ளது.

யூரியா கடத்தல், உர பதுக்கல், அதிக விலைக்கு விற்பனை செய்தல் மற்றும் முறையற்ற பதிவுகள் உள்ளிட்ட விதிமீறல்கள் கண்டறியப்பட்டால், உர கட்டுப்பாடு சட்டம், 1985-ன் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், சம்பந்தப்பட்ட உர விற்பனை நிலையங்களின் உரிமங்களும் ரத்து செய்யப்படும் என வேளாண்மை இணை இயக்குநர் தமிழ்செல்வி எச்சரித்துள்ளார்.

Eminent Writer and Two-Time Sahitya Akademi Awardee Puviyarasu Dies at 96 in Coimbatore

Eminent Tamil writer, poet, translator and two-time Sahitya Akademi Award recipient Puviyarasu passed away at his reside...

FMD Vaccination Camp Begins Tomorrow in Coimbatore - District Collector Announcement

Foot and Mouth Disease vaccination camp will be conducted in Coimbatore district from July 1 to August 10. All cows, bul...

Pollachi MP K Easwarasamy Inaugurates Fair Price Shops and Anganwadi Center Worth Rs 57 Lakh in Coimbatore

Pollachi MP K Easwarasamy inaugurated two fair price shops and an anganwadi center built at Rs 57 lakh from constituency...

Coimbatore–Lokmanya Tilak Terminus Express Delayed by 7 Hours 40 Minutes

Southern Railway has further rescheduled the departure of the Coimbatore–Lokmanya Tilak Terminus Express (Train No. 1101...

Bengaluru–Thiruvananthapuram Weekly Special Trains Extended Till July End

Southern Railway has extended the operation of the SMVT Bengaluru–Thiruvananthapuram North Weekly Special trains till th...

Tiruppur Woman Dies After YouTube-Assisted Home Childbirth; Probe Under Way

A 32-year-old woman from Tiruppur district died after developing severe complications following a home childbirth allege...