கள்ளுக்கு அனுமதி” - தவெக வாக்குறுதியை நம்பித்தான் விவசாயிகள் வாக்களித்தோம்..!”

பொள்ளாச்சியில் நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் டிஎஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்டு, கள் இறக்க அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர்.


பொள்ளாச்சி: கள் இறக்க அனுமதி கோரி, பொள்ளாச்சியில் இன்று நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஊர்வலமாக வந்து டிஎஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.



தொடர்ந்து, டிஎஸ்பி நவீனை சந்தித்த சங்கத்தின் மாநில தலைவர் ஏ.எஸ். பாபு உள்ளிட்ட நிர்வாகிகள், கள் மற்றும் நீரா இறக்க அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர்.



பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சங்க தலைவர் ஏ.எஸ். பாபு கூறுகையில், “2026 தேர்தலின்போது, விவசாயிகளின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும் என்றும், கள்ளிறக்கும் விவசாயிகளுக்கு ஆட்சிக்கு வந்ததும் அனுமதி வழங்கப்படும் என்றும் தமிழக வெற்றி கழகம் அளித்த வாக்குறுதியை நம்பித்தான் விவசாயிகள் அக்கட்சிக்கு வாக்களித்தனர். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தமிழகத்தில் மட்டுமே கள்ளிறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரளா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் செயல்பட அனுமதி அளித்து, பாரம்பரியமான கள்ளிறக்கத்திற்கு மட்டும் தடை விதிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது” என்றும் தெரிவித்தார்.

டாஸ்மாக் மதுக்கடைகளை மூடும் நடவடிக்கைகள் மற்றும் போதை ஒழிப்பு முயற்சிகள் வரவேற்கத்தக்கவை தான். ஆனால், கள்ளை போதைப் பொருட்களுடன் ஒப்பிடக்கூடாது என்றும், தோட்டங்களில் கள்ளிறக்கும் விவசாயிகள் மீது போலீசார் கடுமையாக நடந்து கொள்வதாகவும் குற்றம் சாட்டினர்.

விவசாயிகளின் தோட்டங்களுக்கு நேரடியாக சென்று, அவர்களது செல்போன்கள் உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்வதும் ஏற்க முடியாத செயல் என்பதை வலியுறுத்தி காவல்துறை உயர் அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதுகுறித்து அடுத்தக்கட்டமாக போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த அவர்கள், அதற்கு முன்பாக தமிழக வெற்றி கழக அமைச்சர்களை சந்தித்து விவசாயிகளின் கோரிக்கைகளை எடுத்துரைக்க திட்டமிட்டுள்ளதாக கூறினர்.

மேலும், முதல்வரையும் சந்தித்து பிரச்சினைகளை விளக்கவுள்ளதாக தெரிவித்த அவர்கள், அந்த சந்திப்புகளின் முடிவை பொருத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

From Coimbatore to Chennai: Siruthuli Revives Sholinganallur Lake

On June 5, 2026, in Chennai, Siruthuli, Infosys, Greater Chennai Corporation and WRD inaugurated the restored Sholingana...

Kavundampalayam MLA Kanimozhi Santhosh Meets Minister Ramesh

Kavundampalayam MLA Kanimozhi Santhosh met Minister S. Ramesh during his visit to Coimbatore and held discussions on con...

Shorter Hospital Stays, Faster Recovery: VG Hospital Unveils Advanced Robotic Surgery Platform

Marking a major leap in surgical innovation, V.G. Hospital in Coimbatore has introduced the TOUMAI MT-1000 robotic platf...

Wind Power Season Begins in Tamil Nadu; Installed Capacity Rises to 12,159 MW

The annual wind power season has commenced across Tamil Nadu, with the state’s installed wind energy capacity increasing...

Tourist Found Dead at Isha Yoga Centre; Police Enquiry Indicates Suicide

Police investigations indicate that the 29-year-old man found dead inside the Isha Yoga Centre premises near Coimbatore...

Power Cut in 7 Substations Across Coimbatore Tomorrow (June 9, 2026)

The Tamil Nadu Electricity Board has announced scheduled power disruption in seven substations including Kaundampalayam,...