பொது நிலங்கள் அபகரிப்பு: கோவை மாநகராட்சி அதிகாரிகள் 8 பேர் மீது வழக்குப் பதிவு

கோவை: பொது பயண்பாட்டு  நிலத்தில் வீடுகள் கட்டப்பட்டது தொடர்பான கோப்புகள்,  தொலைந்த விவகாரம் தொடர்பாக கோவை மாநகராட்சி அதிகாரிகள் 8 பேர் மீது சிங்காநல்லூர் காவல்நிலையத்தில் இன்று வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட ஆர்.கே மில் பகுதியில் பிளமேடு தொழிலியல் தொழிலாளர்கள் கூட்டு வீடுகட்டும் கமிட்டி  சார்பால் மனைகள் கட்டப்பட்டுள்ளது. இதில்  பொது பயண்பாட்டு நிலத்தை ஆகிரமித்து கட்டியுள்ளது தொடர்பான தகவல் கேட்டு ஆர்.டியை ஆர்வலர்   தியாகராஜன் , தமிழ்நாடு தகவல் ஆணையத்திக்கு விண்ணப்பித்துள்ளார்.

இதன் அடிப்படையில், பொது பயண்பாட்டு நில ஆக்கிரமிக்கப்பட்டது சம்பந்தப்பட்ட கோப்புகள் தொலைந்து விட்டதாக மாநகரட்சி சார்பாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து தகவல் ஆணையர், கோவை  மாநகரட்சி உதவி ஆணையாளாரும், தற்போது திருப்பூர் உதவி ஆட்சியராக உள்ள கே.என்.பிரபாகரனுக்கு ரூ .25 ஆயிரம் அபராதம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது காவல் நிலையத்தில்  முதற்கட்ட தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, ஆவணத்தை  தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் சமர்பிக்குமாறு உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில் கோவை மாநகராட்சி ஆணையர், இச்சம்பவத்தில் தொடர்புடைய 3 உதவி நகரமைப்பு அலுவலர்கள், 3 கண்காணிப்பாளர்கள் மற்றும் 2 இளநிலை உதவியாளர்கள் என 8 மாநகரட்சி அதிகாரிகள் மீது  சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து  ஆர்.டியை ஆர்வலர்  தியாகராஜன் கூறுகையில், அதிகாரிகளின் பெயர்கள் குறிப்பிடபடாமல்  பதவிகளை மட்டுமே குறிப்பிட்டு புகார் அளிக்கப்படிருப்பது குற்றத்தை மறைக்கும் முயற்சியில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டியவர், அதிகாரிகளின் பெயர்களை முதற்கட்ட தகவல் அறிக்கையில் குறிப்பிட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

Former AIADMK MLA A Shanmugam Joins Tamilaga Vetri Kazhagam in Minister Sengottaiyan's Presence

Former MLA A Shanmugam from Madukkarai, Coimbatore South Rural District AIADMK Secretary, joined Tamilaga Vetri Kazhagam...

Stock Verification Underway in 69 Closed TASMAC Shops Across Coimbatore District

Authorities have begun verifying liquor stock worth several crores of rupees in the 69 TASMAC outlets recently shut down...

Podanur-Chennai Summer Special Train Extended Till June 5

The Podanur-Chennai special express train service has been extended until June 5 to accommodate summer vacation travel d...

Infinium Launches Luxury High-Rise ‘Altitude’ on Sathy Road

Coimbatore-based Infinium Developers launched ‘Altitude’, a twin-tower luxury apartment project on Sathy Main Road, Gana...

coimbatore Peelamedu Ward 27 Councillor Inspects Ration Shop and Cleanliness Works

Coimbatore Corporation Ward 27 Councillor Ambika Danapal conducted field inspections of ration shops and cleanliness ope...

TechGuard Labs Foundation Launched at Sri Ramakrishna Engineering College in Coimbatore

TechGuard Labs Foundation was inaugurated at Sri Ramakrishna Engineering College SREC SPARK in Coimbatore, marking an In...