கோவை உக்கடம் பேருந்து நிலையம் அருகே போலீசார் வாகன சோதனையின்போது ஆட்டோவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 45 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். பீகாரில் இருந்து கோவைக்கு ரயில் மூலம் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட மதுரை, காரைக்குடி பகுதிகளைச் சேர்ந்த மூவர் கைது.
கோவை: கோவை மாநகரப் பகுதியில் போதைப்பொருள் விற்பனையை தடுக்க காவல்துறை ஆணையர் கண்ணன் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி, உக்கடம் பேருந்து நிலையம் அருகே போலீசார் மேற்கொண்ட வாகன சோதனையில் பீகாரில் இருந்து கடத்தப்பட்ட 45 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்ததுடன், மூன்று பேரை கைது செய்துள்ளனர்.
உக்கடம் பேருந்து நிலையம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அந்த வழியாக வந்த ஆட்டோவை போலீசார் தடுத்தி நிறுத்திஉள்ளே இருந்த மூன்று பேரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால், சந்தேகம் அடைந்த போலீசார்ஆட்டோவில் இருந்த பல மூட்டைகளைதிறந்து பார்த்தபோது அதில் கஞ்சா இருந்தது தெரியவந்தது.
ஆய்வில், அந்த மூட்டைகளில் 45 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதுபின்னர், மூன்று பேரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்திய போது, அவர்கள் மதுரையைச் சேர்ந்த ரோகித், கார்த்திக் மற்றும் காரைக்குடியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்றும், கஞ்சா விற்பனை செய்து வருவதும் தெரியவந்தது. போலீசார் அந்த மூன்று பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து காவல்துறையினர் தெரிவித்ததாவது: கைதான மூன்று பேரும் பீகாருக்கு சென்று அங்கிருந்து கஞ்சாவை வாங்கி, அதை ரயில் மூலம் கோவைக்கு கடத்தி வந்துள்ளனர். பின்னர் பொள்ளாச்சி வழியாக மதுரைக்கு கடத்த முடிவு செய்து ஆட்டோவில் பொள்ளாச்சியை நோக்கி சென்றபோது சிக்கிக்கொண்டனர். இந்த மூன்று பேர் மீதும் ஏற்கனவே கஞ்சா கடத்திய வழக்கு உள்ளது.
இந்த வழக்கில் முக்கிய நபர் ஒருவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவர் தலைமறைவாகிவிட்டதால், போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூபாய் 10 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.