Sports
மாநில அளவு துப்பாக்கிச் சுடுதல் போட்டிக்கு கோவை பார்க் கல்லூரி மாணவி இதழ்யா தேர்வு
SimpliCity News Team · 25 days ago

Coimbatore: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) சார்பில் நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான முதலமைச்சர் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் தகுதி போட்டி தேர்வில், பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவி இதழ்யா மாநில அளவில் நடைபெறக்கூடிய போட்டிக்கு தேர்வாகி உள்ளார்.
கோயம்புத்தூர் மண்டல அளவில் நடைபெற்ற 6 மாவட்டங்களுக்கு இடையிலான போட்டியில் இந்த சாதனையை இதழ்யா படைத்துள்ளார். இந்தப் போட்டியில் நாமக்கல், சேலம், நீலகிரி, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர்.
25.10.2026ஆம் தேதி நடைபெறக்கூடிய மாநில அளவிலான போட்டியில் 10 ஓபன் சைட் ஏர் ரைபிள் பிரிவில் கலந்து கொள்ள இதழ்யா இருக்கின்றார்.
மாணவியின் இந்தச் சாதனையை பாராட்டி பார்க் கல்விக் குழுமத்தின் முதன்மை செயல் அலுவலர் Dr. அனுஷா ரவி தெரிவித்தது, இந்தச் சாதனை, கல்லூரியின் பிற மாணவர்களுக்கும் விளையாட்டுத் துறையில் ஈடுபட ஊக்கமளிக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். வரவிருக்கும் மாநில அளவிலான போட்டியில் அமைதியுடனும், தெளிவுடனும் இலக்கை நோக்கி திறமையை முழுமையாக வெளிப்படுத்தி, மேலும் உயர்ந்த சாதனைகளைப் இதழ்யா படைக்க வாழ்த்துவதாக தெரிவித்தார்.
