கோவை மாநகராட்சியில் 75-வது சுதந்திர தினத்தை நினைவு கூறும் வகையில் சீர்மிகு நகரத் திட்டத்தின்கீழ் திவான்பகதூர் சாலையில் சைக்ளோத்தான் (Cyclothon)நிகழ்ச்சியை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.
கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சியில் 75-வது சுதந்திர தினத்தை நினைவு கூறும் வகையில் சீாமிகு நகரத் திட்டத்தின்கீழ் திவான்பகதூர் சாலையில் சைக்ளோத்தான் (Cyclothon)நிகழ்ச்சியை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா இன்று 03.10.2021 கொடியசைத்துத் துவக்கி வைத்து சைக்கிள் பயணத்தைத் தொடங்கினார்.

கோவை மாநகராட்சி சீர்மிகு நகரத் திட்டத்தின்கீழ் மோட்டார் வாகனம் அல்லாத போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில், சைக்ளோத்தான் (Cyclothon) சைக்கிள் பயணமானது ஆர்.எஸ்.புரம் டி.வி.சாலை தபால் அலுவலகம் அருகில் தொடங்கி புரூக் பீல்டு ரோடு, ரேஸ்கோர்ஸ் சாலை, வாலாங்குளம், செல்வ சிந்தாமணி குளம், பெரியகுளம் உள்ளிட்ட அனைத்து குளங்கள் வழியாகச் சென்றடைந்து 22-கி.மீ தூரத்திற்குப் பயணம் மேற்கொண்டு மீண்டும் ஆர்.எஸ்.புரம் டி.வி.சாலை வந்தடைந்தது.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளரும் தனது சைக்கிள் பயணத்தை மேற்கொண்டார். தொடர்ந்து யோகாசனம் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து, சைக்ளோத்தான் நிகழ்ச்சியில் பங்கேற்று சைக்கிள் பயணம் மேற்கொண்ட 200 நபர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் ஸ்மார்ட் சிட்டி இயக்குநர் டாக்டர்.ராஜகுமார், உதவி செயற்பொறியாளர்கள் ஹேமலதா, பிரபாகரன், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.