News
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் பெற வேண்டி சிறப்பு பூஜை
SimpliCity News Team · 07 Oct 2016

பல்லடம் அருகே அல்லாளபுரத்தில் உள்ள உண்ணாமுலை அம்மன் உடனமர் உலகேஸ்வரசுவாமி கோயிலில் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் உடல் நலம் பெற வேண்டி பல்லடம் சட்டப்பேரவை உறுப்பினர் கரைப்புதூர் திரு.ஏ.நடராஜன் அவர்களின் ஏற்பாட்டின் பேரில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.