News
ஒடிசா: சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து: ஒருவர் பலி; 22 பேர் படுகாயம்
oneindia · 30 Sept 2016

கட்டாக்: ஒடிசா மாநிலம் கட்டாக் அருகே சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் அதிவேகமாக வந்து மோதி விபத்துக்குள்ளானதில் பயணி ஒருவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். 22 பேர் படுகாயம் அடைந்தனர்.
புவனேஷ்வர் - பாதர்க் பயணிகள் ரயில் கட்டாக் அருகே உள்ள ரயில் நிலையம் அருகே வந்தபோது, சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலே ஒருவர் உயிரிழந்தார். 22 பேர் படுகாயம் அடைந்தனர்.
தகவல் அறிந்த மீட்பு படையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஒடிசா சுகாதாரத் துறை அமைச்சர் நாயக் காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கும்படி மருத்துவர்களை கேட்டுக்கொண்டார். தவறான சிக்னல் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்திருப்பதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.