400 யூனிட்டுக்குள் பயன்படுத்தினால் மின்சாரத்தை இலவசமாக்க வேண்டும்: கிரில் குறுந்தொழில் சங்கத்தினர் கோரிக்கை

கோவை: கிரில் வெல்டிங் குறுந்தொழிலுக்கு 400 யூனிட்டிற்குள் பயன்படுத்தும் தொழிற்கூடங்களுக்கு இலவச மின்சாரமும், அதற்கு மேல் உபயோகிப்பவர்களுக்கு குறைந்த கட்டணத்திலும் மின்சாரம் வழங்க வேண்டும் என்று கிரில் குறுந்தொழில் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை: கிரில் வெல்டிங் குறுந்தொழிலுக்கு 400 யூனிட்டிற்குள் பயன்படுத்தும் தொழிற்கூடங்களுக்கு இலவச மின்சாரமும், அதற்கு மேல் உபயோகிப்பவர்களுக்கு குறைந்த கட்டணத்திலும் மின்சாரம் வழங்க வேண்டும் என்று கிரில் குறுந்தொழில் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாடு கிரில் குறுந்தொழில் உரிமையாளர் மத்திய சங்கத்தினர் கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அதன் கோவை மாவட்ட தலைவர் ரவி கூறுகையில், "இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு 1.18 சதவீதம் ஜி.எஸ்.டி வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் அல்லது பழைய வரியான 5% குறைக்க மாநில அரசு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். மேலும், கிரில் வெல்டிங் குறுந்தொழிலுக்கு 400 யூனிட்டிற்குள் பயன்படுத்தும் தொழிற்கூடங்களுக்கு இலவச மின்சாரமும் அதற்கு மேல் உபயோகிப்பவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் வழங்க வேண்டும்.

இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வங்கிகள் கடன் வழங்குவது இல்லை. சொத்து பிணை இல்லாமல் மானியத்துடன் கடன் வழங்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பட்டா, ஸ்கொயர் ராடு, இரும்பு தகடுகள் போன்றவற்றின் விலையை அரசே நிர்ணயம் செய்ய வேண்டும். தற்போது பயிற்சி பெற்ற தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ளது. அரசு தொழில் பயிற்சி பாட திட்டங்கள் தொடங்கி பயிற்சி நிலையங்கள் அமைக்க வேண்டும்." என்றார்.

பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது அவ்வமைப்பின் செயலாளர் சின்னசாமி, பொருளாளர் சண்முகம், துணைத் தலைவர்கள் கார்த்திகேயன், மனோகரன் துணை செயலாளர்கள் பிரபு, அனீஸ்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...