வரும் 20-ம் தேதி ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கோவை வருகை

குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி நிறுவனர் தினவிழாவில் கலந்து கொள்வதற்காக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வரும் 20-ம் தேதி கோவை வருகிறார்.

கோவை : குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி நிறுவனர் தினவிழாவில் கலந்து கொள்வதற்காக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வரும் 20-ம் தேதி கோவை வருகிறார். 

குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியின் நிறுவனர் டாக்டர். நா. மகாலிங்கத்தின் 95-வது பிறந்த நாளையொட்டி, நாளை முதல் 23-ம் தேதி வரை நிறுவனர் தினவிழா கொண்டாடப்படுகிறது. இதில், 20-ம் தேதி நடக்கும் நிகழ்ச்சியில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கலந்து கொள்கிறார். அப்போது, கல்லூரியில் புத்தாக்கம் செய்யப்பட்டுள்ள மகாத்மா காந்தி மத்திய நூலகத்தையும், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள “ஞான சபை” எனும் தியான மையத்தையும் திறந்து வைக்கிறார்.

மேலும், அருட்செல்வர் விருதினை ஜி.டி. டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஜி.டி. கோபாலுக்கும், தமிழறிஞரும், கல்வியாளருமான டாக்டர். அவ்வை நடராஜனுக்கு ஆளுநர் வழங்குகிறார்.

இதைத் தொடர்ந்து, 21-ம் தேதி கே.சி.டி.யில் பட்டப்படிப்பை முடித்து வெளிச்செல்லும் மாணவர்களுக்கான சாதனையாளர் விருதுகள் வழங்கப்படுகின்றன. மேலும், கல்வி, விளையாட்டு மற்றும் பிற நடவடிக்கைகளில் சிறந்து விளங்கும் 1,025 மாணவர்களுக்கு ரூ. 1.02 கோடி செலவில் மகாத்மா காந்தியின் பெயரில் ஊக்கத் தொகையாக வழங்கப்படுகிறது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...