7 பேருக்கு மறுவாழ்வு அளித்த தனியார் பள்ளி வாகன ஓட்டுநர்

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மூளைச்சாவு ஏற்பட்ட தனியார் பள்ளி வாகன ஓட்டுநர் லிங்கராஜ் உடல் உறுப்பு தானம் செய்ததால், 7 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.

கோவை : ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மூளைச்சாவு ஏற்பட்ட தனியார் பள்ளி வாகன ஓட்டுநர் லிங்கராஜ் உடல் உறுப்பு தானம் செய்ததால், 7 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர். 

 

கடந்த 13-ம் தேதி ஏற்பட்ட சாலை விபத்தினால் காயமடைந்த தனியார் பள்ளி வாகன ஓட்டுநர் லிங்கராஜ் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டுள்ளது. இதனால், லிங்கராஜின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது உறவினர்கள் முன்வந்தனர். இதையடுத்து, இதயம், நுரையீரல், கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள் மற்றும் இரண்டு கருவிழிகள் தானமாகப் பெறப்பட்டது. ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு இரு சிறுநீரகங்களும் தானமாக கொடுக்கப்பட்டது. சங்கரா கண் மருத்துவமனைக்கு இரண்டு கருவிழிகளும், பி.எஸ்.ஜி. மருத்துவமனைக்கு கல்லீரலும் அனுப்பப்பட்டது. நுரையீரல் மற்றும் இதயம் தற்போது சென்னை க்லோபல் மருத்துவமனையில் ஒரு நோயாளிக்கு பொருத்தபட்டுள்ளது. 

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் ஆனந்த் பாரதன், மற்றும் அவரது குழு மருத்துவர்கள் இந்த அறுவை சிகிச்சை செய்தனர். இதன்மூலம், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை "அதிக மக்கள் எட்டு மணி நேரத்தில் உறுப்பு நன்கொடையாளர்கள் எனப் பதிவு செய்து" கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

உடல் உறுப்புகளை தானமாகக் கொடுத்த கே.என்.எஸ். லிங்கராஜுக்கு மனைவி மற்றும் 14 வயதில் மகனும், 16 வயதில் ஒரு மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...