திருப்பதியில் இருந்து திருமலை வரை பேட்டரியால் இயங்கும் பேருந்தின் சோதனை ஓட்டம் இன்று முதல் தொடங்கியுள்ளது.
திருப்பதி : திருப்பதியில் இருந்து திருமலை வரை பேட்டரியால் இயங்கும் பேருந்தின் சோதனை ஓட்டம் இன்று முதல் தொடங்கியுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்காக திருப்பதி உள்பட பல்வேறு ஊர்களில் இருந்து அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தமிழ்நாடு, கர்நாடகாவில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள் திருப்பதி வரை வருகின்றன. திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஏராளமான பக்தர்களும் வாகனங்களில் வருகின்றனர். சாதாரண பக்தர்களுக்காக ஆந்திர மாநில அரசு சார்பில், திருப்பதியில் இருந்து திருமலை வரை பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால், திருமலையில் காற்று மற்றும் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது.
எனவே, திருமலையில் சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்கவும், பக்தர்களுக்கு அசம்பாவிதம் ஏற்படுவதைத் தடுக்கவும் ஆந்திர மாநில அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில், திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறையாக சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரியால் இயங்கும் 2 எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு செய்தது. எனவே, ரூ. 2 கோடி செலவிலான இரு பேட்டரி பேருந்துகளை ஒருமாதம் வரை சோதனை ஓட்டம் அடிப்படையில் இயக்க முடிவு செய்யப்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த பேட்டரி பேருந்தை போக்குவரத்து கழக அதிகாரிகள் திருப்பதியில் சில நாட்கள் இயக்கிப் பார்த்தனர். இந்த நிலையில் இன்று முதல் சில நாட்கள் திருப்பதி மலைப்பாதையில் பேட்டரி பேருந்தின் சோதனை ஓட்டம் நடை பெறும். முழு அளவிலான சோதனை ஓட்டத்திற்கு பின்னர் பயணிகளை ஏற்றிக் கொண்டு பேட்டரி பேருந்துகள் திருமலை - திருப்பதி இடையே பயணிக்கும். சுமார் 4 மணிநேரம் சார்ஜ் செய்தால் பேட்டரி பேருந்து 250 கிலோ மீட்டர் தூரம் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.