பொதுசேவை மையங்கள் மூலமாக கூடுதலாக 15 வகையான சான்றிதழ்களை எளிதாக விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.
கோவை : பொதுசேவை மையங்கள் மூலமாக கூடுதலாக 15 வகையான சான்றிதழ்களை எளிதாக விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.
பொது இ-சேவை மையங்களின் மூலம் பொதுமக்களின் பல்வேறு அடிப்படைச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றது. தொடர்ந்து கூடுதலாக வருவாய்த்துறை சம்மந்தப்பட்ட 15 வகையான சான்றிதழ்களை பொது சேவை மையங்கள், இ.சேவை மையங்கள் மூலமாக வழங்கப்படுகின்றது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது :- கோவை மாவட்டத்தில் 212 பொதுசேவை, இ.சேவை மையங்கள் மூலமாக வருவாய்த்துறை சான்றிதழ்கள், பட்டா மாறுதல் சமூக நலத்துறை தொடர்பான பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், 15 வருவாய்த்துறை சான்றிதழ்கள் இ.சேவை மையங்கள் மூலமாக வழங்கிடும் திட்டத்தைக் கடந்த 1-ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமியால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, கோவை மாவட்டத்திலும் இத்திட்டம் தொடங்கப்பட்டு, இதற்கான சேவை கட்டணமாக ரூ. 60 மட்டும் பொதுசேவை, இ.சேவை மையங்களில் வசூலிக்கப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது. விவசாய வருமான சான்றிதழ், வாரிசு சான்றிதழ், குடிபெயர்வு சான்றிதழ், சிறு, குறு விவசாயி சான்றிதழ், வசிப்பிட சான்றிதழ், ஆண்குழந்தை இல்லை என்பதற்கான சான்றிதழ், கலப்பு திருமண சான்றிதழ், சொத்து மதிப்பு சான்றிதழ், திருமணம் ஆகாதவர் என்பதற்கான சான்றிதழ், விதவை சான்றிதழ், அடகு வணிகர் உரிமம், இயற்கை இடர்பாடுகளினால் இழந்த பள்ளி, கல்லூரி சான்றிதழ்களின் நகல் பெற சான்றிதழ், வேலையில்லாதவர் என்பதற்கான சான்றிதழ், கடன் கொடுப்போர் உரிமம், இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர் வகுப்பு சான்றிதழ் போன்ற 15 சான்றிதழ்களைப் பெறுவதற்கு பொதுமக்கள் தங்கள் அருகில் உள்ள பொது சேவை மையங்கள்ஃஇ.சேவை மையங்களிலேயே விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம்.
இதனால், பொதுமக்கள் சான்றிதழ்களுக்காக பல்வேறு அலுவலர்களைத் தேடி செல்ல வேண்டியதில்லை என்பதால் நேர விரயம் பெரிதும் குறைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தினை பயன்படுத்தி அனைவரும் எளிதாகச் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.