காவிரி படுகை வெற்றிடத்தை நிரப்ப முடியுமா..? : ரஜினிக்கு ராதாரவி சவால்

தமிழக அரசியலில் வெற்றிடம் இருப்பதாகக் கூறும் நடிகர் ரஜினிகாந்த், கர்நாடகத்திடம் இருந்து தண்ணீரைப் பெற்று காவிரி படுகை வெற்றிடத்தை நிரப்ப முடியுமா என நடிகரும், தி.மு.க.வைச் சேர்ந்தவருமான ராதாரவி கேள்வி எழுப்பியுள்ளார்.

திருப்பூர் : தமிழக அரசியலில் வெற்றிடம் இருப்பதாகக் கூறும் நடிகர் ரஜினிகாந்த், கர்நாடகத்திடம் இருந்து தண்ணீரைப் பெற்று காவிரி படுகை வெற்றிடத்தை நிரப்ப முடியுமா என நடிகரும், தி.மு.க.வைச் சேர்ந்தவருமான ராதாரவி கேள்வி எழுப்பியுள்ளார். 



திருப்பூர் மாநகர மாவட்ட தி.மு.க. சார்பில், கட்சியின் செயல்தலைவர் ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு இளைஞர் எழுச்சி தினப் பொதுக்கூட்டம் ராயபுரம் பகுதியில் நடைபெற்றது. இதில், தி.மு.க.வை சேர்ந்த நடிகர் ராதாரவி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது :- நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோர் அரசியலுக்கு வருவதை கடுமையாக விமர்சித்தார். கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் அம்மாநிலத்தவர்கள் ஆளும் போது தமிழகத்தையும், தமிழர்கள்தான் ஆளவேண்டும். 



தமிழகத்தில் வெற்றிடம் இருப்பதாக சொல்லும் ரஜினிகாந்த், காவிரி படுகையில் உள்ள வெற்றிடத்தை நிரப்ப, அவர் சொத்து சேர்த்து வைத்திருக்கும் கர்நாடகம் சென்று கிருஷ்ணசாகர் அணையை திறந்து தண்ணீர் கொண்டு வர முடியுமா..?. அம்மா இருக்கும்போது சிறிய பிரச்சினைக்காகவே பயந்துபோய் வெளிநாடு செல்வதாக கூறிய கமல்ஹாசனை நம்பி எப்படி வாக்களிக்க முடியும். மேலும், பெரியார் சிலையை உடைப்பதாகக் கூறிய எச்.ராஜா இதுபோன்ற சர்ச்சை கருத்துக்களை அடிக்கடி பேசினால் பா.ஜ.க.வில் வேண்டுமானால் உயர்பதவி கிடைக்குமே தவிர, தமிழகத்தில் சிவலோக பதவிதான் கிடைக்கும். அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள குழப்பத்தால் அவர்களே அழிந்துபோவார்கள். தி.மு.க.தான் அடுத்த ஆட்சி அமைக்கும். அதற்கு தொண்டர்கள் உறுதுணையாக உழைக்க வேண்டும். இவ்வாறு பேசினார். 

இந்நிகழ்ச்சியில் தி.மு.க.வின் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...