அதிக வெளிச்சம் கொண்ட விளக்கால் பள்ளி மாணவ, மாணவிகளின் கண்பாதிப்பு

நெல்லை அருகே பள்ளி விழாவில் அதிகம் வெளிச்சம் கொண்ட விளக்கு பயன்படுத்தப்பட்டதால், மாணவ, மாணவிகள் உள்பட 100-க்கும் மேற்பட்டோருக்கு கண்பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நெல்லை : நெல்லை அருகே பள்ளி விழாவில் அதிகம் வெளிச்சம் கொண்ட விளக்கு பயன்படுத்தப்பட்டதால், மாணவ, மாணவிகள் உள்பட 100-க்கும் மேற்பட்டோருக்கு கண்பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஏர்வாடியில் ஒரு தனியார் பள்ளியில், ஆண்டு விழா நடைபெற்றது. அப்போது, மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடத்த மேடை அமைக்கப்பட்டு இருந்தது. அந்த மேடையில் அதிக வெளிச்சத்திற்காக சக்தி வாய்ந்த சோடியம் விளக்குகள் அமைக்கப்பட்டு இருந்தது. அதில், ஏதோ கோளாறு ஏற்பட்டதால், அங்கு இருந்த 60 மாணவர்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கண்ணில் பாதிக்கப்பட்டுள்ளது. 



இதனால், பாதிக்கப்பட்டவர்கள் இன்று மாணவ, மாணவிகள் சிகிச்சைக்காக மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பள்ளியின் பொறுப்பாளருக்கும், இதே பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அதிக வெளிச்சத்தால் மாணவ, மாணவிகள் கண் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். இது குறித்து களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறுகையில், "பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி கண் மருத்துவ துறையின் மூலம் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்து, தொடர் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இனி இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்கவும், அனைத்துப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்படும்," என்றார். 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...